"ஆல் டைம் கிரேட்": நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசிய ஜோ ரூட் - கங்குலி பாராட்டு!

"ஆல் டைம் கிரேட்": நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசிய ஜோ ரூட் - கங்குலி பாராட்டு!
"ஆல் டைம் கிரேட்": நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசிய ஜோ ரூட் - கங்குலி பாராட்டு!

லார்ட்ஸ் டெஸ்டில் சதம் விளாசி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவியதற்காக இங்கிலாந்து பேட்டர் ஜோ ரூட்-ஐ சவுரவ் கங்குலி “ஆல் டைம் கிரேட்” என்று குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஆட்டம் சென்று கொண்டிருந்த களமிறங்கிய வலது கை பேட்டர் ஜோ ரூட் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நியூசிலாந்தின் 2வது இன்னிங்ஸ்க்கு பிறகு இங்கிலாந்துக்கு 277 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 20வது ஓவரில் 69 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து இங்கிலாந்து தடுமாறியது.

இக்கட்டான சூழலில் இணை சேர்ந்த ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தனர். பின்னர் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டோக்ஸ் தனது விக்கெட்டை இழந்தார். அப்போது இங்கிலாந்து அணி 159 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து இருந்தது. அடுத்து வந்த பென் ஃபோக்ஸ் ஜோ ரூட்டிற்குன் உறுதுணையாக விளையாட, இருவரும் இணைந்து ஆறாவது விக்கெட்டுக்கு 120 ரன்களை ஆட்டமிழக்காமல் எடுத்து இங்கிலாந்தை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

இறுதியில் ரூட் மற்றும் ஃபோக்ஸ் முறையே 115 மற்றும் 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டமிழக்காமல் ரூட் சதம் விளாசி அசத்தியதால் இங்கிலாந்து அணி போட்டியை வென்றது. தற்போது பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அந்த அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

முதல் டெஸ்டின் 4 வது நாளில் ஜோ ரூட் தனது சதத்தை விளாசினார். அந்த வேளையில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை பதிவு செய்தார். ரூட் இந்த மைல்கல்லை எட்டியவுடன் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, அவரை எல்லா நேரத்திலும் சிறந்தவர் என்று குறிப்பிட்டு பாராட்டினார். ”இவ்வளவு நெருக்கடியான சூழலிலும் எவ்வளவு அற்புதமாக விளையாடி உள்ளார் ஜோ ரூட். அவர் எல்லா காலத்திலும் சிறந்தவர்” என்று கங்குலி தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார். அலெஸ்டர் குக்கிற்கு பிறகு 10,000 டெஸ்ட் ரன்களை பதிவு செய்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் ரூட் ஆவார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com