ஷமியின் கர்மா ட்வீட்டுக்கு பதிலடி! ஹர்சா போக்ளேவை சுட்டிகாட்டி அக்தர் போட்ட பதிவு

ஷமியின் கர்மா ட்வீட்டுக்கு பதிலடி! ஹர்சா போக்ளேவை சுட்டிகாட்டி அக்தர் போட்ட பதிவு
ஷமியின் கர்மா ட்வீட்டுக்கு பதிலடி! ஹர்சா போக்ளேவை சுட்டிகாட்டி அக்தர் போட்ட பதிவு

பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததை அடுத்து ஷோயப் அக்தரின் சோகமான பதிவிற்கு “சாரி பிரதர், இதைத்தான் கர்மா” என்று சொல்வார்கள் என்று பதிவிட்டிருந்தார் முகமது ஷமி. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முகமது ஷமிக்கு பதில் பதிவிட்டிருக்கிறார் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர்.

2022 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளின் தோல்விகளுக்கு பிறகு, இந்தியா பாகிஸ்தான் ரசிகர்களுக்கிடையே மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களுக்குமிடையே கூட வார்த்தை போர்கள் நடந்து வருகின்றன.

அந்த வகையில் நவ 10ஆம் தேதி இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிராக அரையிறுதியில் தோல்வியடைந்ததை அடுத்து, இந்திய அணியை கடுமையாக சாடியிருந்தார் ஷோயப் அக்தர். அவர் பேசுகையில் “இந்திய அணி இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை சந்திக்கவோ இல்லை, மெல்போர்ன் நகருக்கு வரவோ கூட தகுதியில்லை” என்று சாடியிருந்தார்.

அதுமட்டுமின்றி இந்தியாவின் தோல்விக்கு பிறகு பாகிஸ்தானின் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஒரு டிவிட்டை பதிவிட்டிருந்தார். அதில் “ அப்போ ஞாயிறு கிழமை அன்று இறுதிபோட்டியானது 152/0 என்று இந்தியாவை வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணிக்கும், 170/0 என்று இந்தியாவை வென்ற இங்கிலாந்து அணிக்கும் தானா” என்று பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்ததை அடுத்து, பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் சோகமாக பதிவிட்டதிற்கு பதிலளித்திருந்த இந்திய வீரர் முகமது ஷமி, “ இதைத்தான் பிரதமர் கர்மா என்று சொல்வார்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.

முகமது ஷமியின் அந்த கருத்துக்கு பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஷோயப் அக்தர் தான் முதலில் இந்திய அணியைப்பற்றி பேசினார் என்று இந்திய ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து பதிலடி கொடுத்து வந்தனர். இந்நிலையில் முகமது ஷமியின் அந்த கருத்திற்கு பதிலளிக்கும் விதமாக ஷோயப் அக்தர் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட்டின் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவின் டிவிட்டை சுட்டிக்காட்டி இதுதான் ”அறிவார்ந்த கருத்து” என்று பதிவிட்டுள்ளார் ஷோயப் அக்தர்.

ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ள கருத்தில், “ சில அணிகள் தான் 137 போன்ற குறைவான ரன்களுக்கு இவ்வளவு பைட் செய்வார்கள். சிறந்த பந்துவீச்சு உள்ள அணி பாகிஸ்தான்” என்று பதிவிட்டிருந்தார். அதை சுட்டிகாட்டி முகமது ஷமிக்கு பதிலளித்து இருக்கும் ஷோயப் அக்தர், ” இதைத்தான் அறிவார்ந்த கருத்து என்று சொல்லுவார்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com