‘மரங்களை காப்போம்’ என மரக்குடிலில் நின்று புகைப்படம்: விமர்சனத்திற்குள்ளான தோனி

‘மரங்களை காப்போம்’ என மரக்குடிலில் நின்று புகைப்படம்: விமர்சனத்திற்குள்ளான தோனி

‘மரங்களை காப்போம்’ என மரக்குடிலில் நின்று புகைப்படம்: விமர்சனத்திற்குள்ளான தோனி
Published on

‘மரங்களை காப்போம்’ என்ற மரப்பலகை வாசகத்துடன், மரக்குடிலில் நின்ற மகேந்திரசிங் தோனியின் புகைப்படம் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் புகைப்படம் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியானது.  ‘மரங்களை நடுவோம், காடுகளை காப்போம்’ என்ற வாசகத்துடன் இடம்பெற்ற தோனியின் அந்த புகைப்படம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. நேர்மறையான செய்திபோல் தோன்றிய அந்த படம் தற்போது பலதரப்பாலும் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகிவருகிறது.

அந்தப் படத்தில், ‘மரங்களை நடுவோம், காடுகளை காப்போம்’ என்ற வாசகம் எழுதப்பட்ட மரத்தாலான பலகையுடன், முழுவதும் மரத்தாலான குடிலில் ஹேண்டில்பார் மீசையுடன் தோனி இருப்பதுதான் தற்போது எழுந்துள்ள விமர்சனத்துக்கு காரணம்.

இந்த புகைப்படம் இமாச்சலப் பிரதேசத்தின் ரத்னாரியில் உள்ள மீனா பாக் என்னும் ஓய்வு இல்லத்தில் எடுக்கப்பட்டது,  அங்குதான் தற்போது தோனி தனது குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். இந்த சர்ச்சை தொடர்பாக பேசிய அந்த ஓய்வு இல்லத்தின் உரிமையாளர், இந்த இல்லம் அமைக்க பயன்படுத்திய மரம், கழிவுகளாக அப்புறப்படுத்தப்பட்ட மரங்கள்தான் என்று விளக்கினர். இம்மரங்கள்தான் குளிர்காலத்தில் நெருப்புக்காக வைக்கப்படுவதாகவும் கூறினார்.

தோனியின் இந்த புகைப்படத்திற்கு, அவரின் பல ரசிகர்களும் ஆதரவு கருத்து தெரிவித்தனர். ஆனால் பெரும்பான்மையான நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை விமர்சித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com