“வானிலையை தான் கட்டுப்படுத்த முடியவில்லை” - கோலியின் சின்ன வருத்தம்

“வானிலையை தான் கட்டுப்படுத்த முடியவில்லை” - கோலியின் சின்ன வருத்தம்
“வானிலையை தான் கட்டுப்படுத்த முடியவில்லை” - கோலியின் சின்ன வருத்தம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடர் குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

3வது டி20 போட்டியின் வெற்றி குறித்து பேசிய விராட் கோலி, “தொடக்கத்தில் ரோகித்தும், தவானும் ஆடும் போது எளிதாக வெற்றி பெறுவோம் என தோன்றியது. ஆனால் மெதுவாக நாங்கள் விக்கெட்டுகளை இழந்தோம். டி20 கிரிக்கெட் எப்படி மாறும் என்பதை அது உணர்த்தியது. ஒரு கட்டத்தில் பேட்டிங்கை வெளிப்படுத்தாவிட்டால் தோல்வி அடைவோம் என நிலை மாறியது. இறுதி தினேஷ் கார்த்திக் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலியாவில் மேக்ஸி மற்றும் ஸம்பா சிறப்பாக பந்துவீசினார்கள். 

மொத்தமாக பார்க்கும் போது இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவை விட நம் அணி சிறப்பாக விளையாடியது. நமது தொடக்க ஆட்டக்காரர்களின் அதிரடியை நிறுத்துவது அவர்களுக்கு கடினமாக அமைந்தது. நான் மூன்றாவதாக களமிறங்கிய இறுதிவரை விளையாடினேன். இன்று மிகவும் நுட்பமாக பந்துகளை எதிர்கொள்ள நேரிட்டது. வழக்கம் போல் மழை வந்து இன்று 180 இலக்காக அமையும் என எண்ணினேன். இந்த தொடரில் வானிலையை தான் கட்டுப்படுத்த முடியவில்லை. இன்றைய ஆட்டத்தில் ரசிகர்கள் மிகவும் உற்காசப்படுத்தியது வெற்றிக்கு தூண்டுதலாக இருந்தது” என தெரிவித்தார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் ஃபிஞ்ச் மற்றும் ஆர்சி ஷார்ட் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 28 (23) ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஃபிஞ்ச் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஆர்சி ஷார்ட்டும் 33 (29) ரன்களில் அவுட் ஆனார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் யாரும் எதிர்பாராத விதமாக குருனல் பாண்டியா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதைத்தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் மற்றும் தவான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 23 (16) ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து வந்த கேப்டன் கோலி ரன்களை குவிக்க தொடங்கினார். மற்றொரு புறம் தவான் அதிரடி காட்டினார். 41 (22) ரன்களில் தவான் அவுட் ஆனார். ஆனால் நிலைத்து விளையாடிய கோலி அரை சதம் அடித்தார். 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்து இந்தியா வெற்றி பெற்றது. இறுதிவரை விளையாடிய கோலி அவுட் ஆகாமல் 41 பந்துகளில் 61 ரன்களை சேர்த்தார். இதனால் 1-1 என்ற கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது. போட்டியின் ஆட்டநாயகனாக க்ருனால் பாண்டியாவும், தொடரின் நாயகனாக ஷிகர் தவானும் தேர்வு செய்யப்பட்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com