”நான்காவது இன்னிங்க்ஸ் இருந்தாதானே.! இங்கிலாந்தை கலாய்த்த - வாசிம் ஜாஃபர்.

”நான்காவது இன்னிங்க்ஸ் இருந்தாதானே.! இங்கிலாந்தை கலாய்த்த - வாசிம் ஜாஃபர்.
”நான்காவது இன்னிங்க்ஸ் இருந்தாதானே.! இங்கிலாந்தை கலாய்த்த  - வாசிம் ஜாஃபர்.

இங்கிலாந்து பாஸ்பால் அனுகுமுறையில் நான்காவது இன்னிங்க்ஸில் அற்புதங்கள் நிகழ்த்தும் என்ற நிலையில், நான்காவது இன்னிங்க்ஸ் இருந்தாதானே நிகழ்த்தும் என்று இங்கிலாந்து அணியை விமர்சித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர்.

சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து தொடர் தொடங்கியதிலிருந்தே பாஸ்பால் அனுகுமுறை குறித்து சவுத் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து வீரர்களுக்கு இடையில் பல்வேறு விதமான கருத்து மோதல்கள் இருந்து வருகிறது.

தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.

இந்நிலையில் ஒரு நாள் போட்டிகள் 1-1 என்ற வீதம் சமனில் முடிந்தது. மற்றும் டி20 போட்டிகளில் அதிரடியாய் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற வீதத்தில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து வெற்றிப்பெற்றது. 

முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னர், எந்த நிலையிலும் அதிரடியாய் ஆடி வெற்றி பெறும் ஆட்ட அனுகுமுறையை ப்ரெண்டன் மெக்கல்லம் தலைமை பயிற்சியாளாராய் ஆனதிலிருந்து இங்கிலாந்து அணி ஆடி வருகிறது. அதற்கு பாஸ்பால் (bazball) என்னும் பெயர் கூறப்படுகிறது. பாஸ்பால் அணுகுமுறை குறித்து தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டீன் எல்கர் “ டெஸ்ட் போட்டிகளில் துணிச்சலான ஆட்டத்தில் நீண்ட ஆயுட்காலம் இருப்பதை நான் காணவில்லை, ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் காலப்போக்கில் மாலை நேரங்களை நான் காண்கிறேன்” என்று விமர்சித்தார்.

இதனை தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடந்த பயிற்சி போட்டியில் இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்க அணியை இன்னிங்க்ஸ் மற்றும் 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போது இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் சாம் பில்லிங்க்ஸ் “நாங்கள் ஒரு ஓவருக்கு 5.74 ரன்கள் என்ற முறையில் நான்கு நாட்களில் ஒரு சர்வதேச அணியை (இந்திய அணி குறித்து) இன்னிங்ஸ் மூலம் தோற்கடித்துள்ளோம். நேர்மையான முறையில், அதைப் புறக்கணிப்பது மிகவும் முட்டாள்தனமாக இருக்கிறது” என்று டீன் எல்கர் கூறியதற்கு பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் தற்போது நடந்து முடிந்திருக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இன்னிங்க்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து பதிலடி கொடுத்திருக்கிறது.

இங்கிலாந்து அணி தோற்றதையடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர், “இங்கிலாந்து பாஸ்பால் அனுகுமுறையில் நான்காவது இன்னிங்க்ஸில் அற்புதங்கள் நிகழ்த்தும் என்ற நிலையில், நான்காவது இன்னிங்க்ஸ் இருந்தாதானே நிகழ்த்தும் என்று சவுத் ஆப்பிரிக்கா ஆடி வென்று இருக்கிறது” என்று விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com