’இப்படியாகிப் போச்சே...’ காமெடி ரன் அவுட் பற்றி அசார் அலி பேட்டி!

’இப்படியாகிப் போச்சே...’ காமெடி ரன் அவுட் பற்றி அசார் அலி பேட்டி!

’இப்படியாகிப் போச்சே...’ காமெடி ரன் அவுட் பற்றி அசார் அலி பேட்டி!
Published on

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கவனக்குறைவால் காமெடியாக ரன் அவுட் ஆனது பற்றி பாகிஸ்தான் வீரர் அசார் அலி விளக்கம் அளித்துள்ளார்.

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 282 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 145 ரன்களும் எடுத்தன. இரண்டாகது இன்னிங்ஸில் 137 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் அணி நேற்று விளையாடியது.   4-வது விக்கெட்டுக்கு அசார் அலி 64 ரன்களுடனும், அசாத் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

அப்போது, ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் சிடில் வீசிய பந்தை அசார் அலி சிலிப் திசையில் அடித்தார். அது பவுண்டரி நோக்கி வேகமாக ஓடியது. இதைப் பார்த்த அசார் அலி, அது பவுண்டரிதான் என முடிவு செய்து, ஆடுகளத்தின் நடுப்பகுதிக்கு வந்து மற்றொரு பேட்ஸ்மேன் ஆசாத்துடன் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், பவுண்டரியை நோக்கி வேகமாகச் சென்ற பந்து பவுண்டரி அருகில் அப்படியே நின்று விட்டது. இதையடுத்து ஆஸி. வீரர் ஸ்டார்க் பந்தை விக்கெட் கீப்பர் பெயினிடம் வீச, அவர் அழகாக ரன் அவுட் செய்தார். 

(பாபர் அசாம்)

அசார் அலிக்கு, என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. பிறகு நடுவர் நடந்ததை விளக்க அடக்கொடுமையே என்று நடை யை கட்டினார் அசார் அலி. இந்த சம்பவம் ஆஸ்திரேலிய வீரர்களை சிரிக்க வைத்தது. கவனக்குறைவால் அவுட் ஆன இந்த செயல், சமூக வலைத்தளங்களிலும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. 

இதுபற்றி அசார் அலியிடம் கேட்டபோது, ’’களத்தில் இருந்த ஆசாத்தும் நானும் இதைப் பற்றி நினைக்கவே இல்லை. ஸ்டார்க், பவுண்டரியில் இருந்து பந்தை வீசும்போது, வழக்கம் போல பவுண்டரி சென்ற பந்தை எடுத்துதான் வீசுகிறார் என நினைத் தோம். ஆனால் அது ரன் அவுட் என்பது தெரியவில்லை. விக்கெட் கீப்பர் ரன் அவுட் ஆக்கிவிட்டு ஓடி வந்தபோதுதான், ஏதோ நடந்திருக்கிறது என்பது புரிந்தது. இதற்கு நானே பொறுப்பு. என் விக்கெட்டை எளிதாக அவர்களுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன். டிரெஸ்சிங் ரூமில் எல்லோரும் இதை வைத்து காமெடி செய்தார்கள். 

பந்து ஸ்விங் ஆகி வந்தது. தாமதமாகி வந்த பந்து பற்றி ஆசாத்திடம் பேசிக்கொண்டிருந் தேன். ஆனால், ஆஸ்திரேலிய வீரர்க ள் சிறப்பாக செயல்பட்டு என்னை அவுட் ஆக்கினார்கள். இதில் அவர்களை குறை சொல்ல ஒன்றும் இல்லை. இது என் வாழ்வி ல் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகி விட்டது. இதுபற்றிய கேள்வியை இன்னும் சில வருடங்கள் கேட்டுக்கொண்டிருப் பார்கள் என நினைக்கிறேன். இதை மறக்க மாட்டார்கள். நான் நாட்டுக்குத் திரும்பியதும் எனது மகன்கள் கூட இந்த கேலிக்குரி ய ரன் அவுட் பற்றி கேட்பார்கள்’ என்றார். 

பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 400 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பாபர் அசாம் 99 ரன்னில் அவுட் ஆகி, ஒரு ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். கேப்டன் சர்பிராஸ் அகமது 81 ரன் எடுத்தார்.  இதையடுத்து ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com