“கோலி எப்படி? தோனி எப்படி?” - வித்தியாசம் காட்டும் பேடி அப்டான்
உலகக் கோப்பையில் இந்தியன் அணியின் பங்களிப்பு குறித்து கிரிக்கெட் பயிற்சியாளர் பேடி அப்டான் கருத்து தெரிவித்துள்ளார்.
அப்டான் இந்திய அணிக்கு 2011ஆம் உலகக் கோப்பையின் மனோத்தத்துவ பயிற்சியாளராக இருந்தார். அதற்கு முன்னதாக 2009ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்க அணியின் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி மூன்று தரப்பு கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடம் பிடித்தது. இதைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
வரும் மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ள உலகக் கோப்பை குறித்து கருத்து தெரிவித்துள்ள அப்டான், “2011 உலகக் கோப்பையின் போது இந்தியா சமநிலை கொண்ட அணியாக இருந்தது. பேட்டிங்கில் சேவாக், காம்பீர், சச்சின் மற்றும் கோலி எனப் பலம் இருந்தது. தோனி அவர்களுக்கு மேலாக இருந்தார். இந்திய அணியின் மற்ற கேப்டன்களை விட தோனி சாந்தமானவர், தெளிவானவர், மற்ற வீரர்களை ஊக்குவிப்பவர். தோனி களமிறங்கில் விளையாடிக்கொண்டிருக்கும் பேட்ஸ்மேனுக்கு பெரும் நிம்மதி கிடைக்கும். ஏனென்றால் தோனி அவர் தன் தோளில் பொறுப்புகளை சுமப்பார்.
ஆனால் தோனி சில நேரங்களில் மிகவும் பொருமையாக விளையாடுவார். சில நேரங்களில் அவர் தவறாக விளையாடுவதாக இருக்கும். ஆனால் இறுதி நிமிடங்களில் அவர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவார். ஆனால் கோலி அப்படி இல்லை. ஒரு ஓவருக்கு 7 ரன்கள் எடுத்தால் போதும் என்றாலும், கோலி ஒரே சீரான ஆட்டத்தையே விளையாடுவார். அவர் அடுத்தவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் அவர் ரன்களை அடித்துவிடுவார். அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். சில வருடங்களுக்கு முன்னாள் கோலி மற்றும் ஸ்மித் இருவரும் மற்றவர்களை விட சிறந்த கேப்டன்களாக இருந்தனர்” என்று கூறியுள்ளார்.