“டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மாற்றப்படலாம்”- எம்.எஸ்.கே பிரசாத்

“டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மாற்றப்படலாம்”- எம்.எஸ்.கே பிரசாத்
“டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மாற்றப்படலாம்”- எம்.எஸ்.கே பிரசாத்

கே.எல்.ராகுலின் பேட்டிங் ஃபார்ம் சற்று கவலையாக தான் உள்ளது என்று இந்திய தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்தத் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அத்துடன் நடுகள ஆட்டக்காரர்கள் ரஹானே மற்றும் விஹாரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் சரியாக விளையாடவில்லை. 

ராகுலின் ஆட்டத்தை முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் கே.எல்.ராகுலின் ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “கே.எல்.ராகுல் தற்போது மோசமான ஃபார்மில் இருக்கிறார். எனினும் அவர் ஒரு நல்ல ஆட்டக்காரர். அவர் அதிக நேரம் ஆட்டத்தில் செலவிட்டு ரன்களை சேர்த்தால் அவரது ஃபார்ம் மீண்டும் திரும்பிவிடும். டெஸ்ட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க ரோகித் ஷர்மாவின் பெயர் பரிசீலனையில் உள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு தேர்வுக்குழு இன்னும் கூட்டம் நடத்தவில்லை. எனவே அடுத்து நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடருக்கான அணி தேர்வில் இது குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ரோகித் ஷர்மாவை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com