“பந்து வீசுவதில் பும்ரா ஒரு குழந்தை”-பாக். முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக்

“பந்து வீசுவதில் பும்ரா ஒரு குழந்தை”-பாக். முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக்

“பந்து வீசுவதில் பும்ரா ஒரு குழந்தை”-பாக். முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக்
Published on

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா. அவர் இன்றைய தலைமுறை வீரர்களில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், தற்போது ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார், மேலும் டெஸ்ட் தரவரிசையில் 5 வது இடத்தில் இருந்து வருகிறார். 

தற்போது இந்தச் சாதனை பட்டியலில் இவர் இருந்தாலும், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் இவரைப் பற்றி குறிப்பிடும்போது, பும்ராவை எளிதில் ஆதிக்கம் செலுத்திவிடுவேன் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். ஒரு நேர்காணலில் இவர்,  40 வயதான பும்ராவை ‘ஒரு குழந்தை பந்து வீச்சாளர்’ என்று குறிப்பிட்டு அழைத்துள்ளார்.

“உலகம் முழுவதும் உள்ள உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களுடன் நான் விளையாடியுள்ளேன். ஆகவே ஜஸ்பிரீத் பும்ராவை எதிர்கொள்வதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நான் அவருக்கு முன்னால் இருந்தால் அவரை அடக்கி ஆடியிருப்பேன். ஏனென்றால் க்ளென் மெக்ராத், வாசிம் அக்ரம் அல்லது சோயிப் அக்தர் போன்ற பந்து வீச்சாளர்களை நீங்கள் எதிர்கொள்ளும்போது, ​அதிக நம்பிக்கையைப் பெறுவீர்கள். ஆகவே பும்ரா எனக்கு  ‘ஒரு குழந்தை பந்து வீச்சாளர்’. நான் அவரை எளிதில் ஆதிக்கம் செலுத்தி வென்றுவிட முடியும்.”என்று ரசாக் கூறினார்.

ஆனால் தற்போது உள்ள வீரர்களிடையே பும்ரா ஒரு நல்ல பந்து வீச்சாளர் என்றும் அவர் கூறியுள்ளார். “தற்போது உள்ள வீரர்களில் பும்ரா சிறப்பாக செயல்படுகிறார். அவர் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளார். ஆனால் அவரது செயல்கள் மோசமாக உள்ளன. அவர் மோசமாக ஓடுகிறார். ஆனால் அவரது பந்து வீசும்விதம் சிறப்பானது. எனவே, அவர் திறமையானவர், ”என்றும் ரசாக் கூறினார்.

ரஸாக், இந்திய கேப்டன் விராட் கோலி பற்றி பேசி இருக்கிறார். “1992 முதல் 2007 ஆம் ஆண்டுகள் வரை விளையாடிய வீரர்களிடம் நீங்கள் பேசினால், அவர்கள் சொல்வார்கள் கிரிக்கெட் எப்படி இருந்தது என்று. அந்த நேரத்தில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தனர். இப்போது உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இல்லை. பந்துவீச்சு, பேட்டிங் அல்லது பீல்டிங்கில் ஆழம் இல்லை”என்று அவர் கூறினார்.

“சச்சின் மதிப்பெண் பெற்றதைபோல விராட் கோலி மதிப்பெண் பெறுவார். ஆனால் நீங்கள் அவரை சச்சின் டெண்டுல்கர் போன்ற பிரிவில் வைக்க முடியாது. இவர் முற்றிலும் வேறுபட்டவர் ”என்று ரசாக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com