”அது ஒய்டு பால் இல்லையா?” - கோபத்தில் அம்பயரை ஆபாச வார்த்தையால் திட்டிய தீபக் ஹூடா!

”அது ஒய்டு பால் இல்லையா?” - கோபத்தில் அம்பயரை ஆபாச வார்த்தையால் திட்டிய தீபக் ஹூடா!
”அது ஒய்டு பால் இல்லையா?” - கோபத்தில் அம்பயரை ஆபாச வார்த்தையால் திட்டிய தீபக் ஹூடா!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டியில் பேட்டிங் செய்த தீபக் ஹூடா, அவருடைய சிறப்பான பேட்டிங்கால் ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்குபெற்று விளையாடுகிறது. இரு அணிகளுக்குமான முதல் டி20 போட்டி நேற்று மும்பையின் வான்கடே மைதானத்தில் இரவு நேர ஆட்டமாக நடைபெற்றது. ரோலர் ஹோஸ்டர் போல ஏற்ற இறக்கங்களுடன் திரில்லரின் உச்சிக்கே சென்ற போட்டியில், கடைசி பந்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது இந்திய அணி.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் ஓவரில் இஷான் கிஷானின் அதிரடியில் 17 ரன்களோடு தொடங்கியது. முதல் ஓவருக்கு பிறகு இந்த போட்டி 190+ ரன்களுக்கு சென்று விறுவிறுப்பாக செல்லும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எல்லாம் எதுவும் இல்லை என தங்களுடைய அபாரமான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை கட்டுக்குள்ளாகவே வைத்திருந்தனர் இலங்கை பந்துவீச்சாளர்கள்.

இந்தியாவின் ஓபனர் சுப்மன் கில், சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் என அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேற, நல்ல தொடக்கத்தை கொடுத்த இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் முக்கியமான தருணத்தில் வெளியேறினர். இந்நிலையில் ஸ்கோரை உயர்த்த வேண்டிய பொறுப்பு தீபக் ஹூடா மற்றும் அக்சர் பட்டேல் கைகளில் சேர்ந்தது. பந்துவீசிய 6 இலங்கை பவுலர்களில் 5 பேர் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர். 14.1 ஓவரில் 94 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி.

இறுதி நேரத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் பட்டேல் மற்றும் தீபக் ஹூடா இருவரும், இந்திய அணியை 20 ஓவர் முடிவில் 162 ரன்களுக்கு எடுத்து சென்றனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் அக்சர் பட்டேல் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 31 ரன்கள், தீபக் ஹூடா 4 சிக்சர்களுடன் 41 ரன்கள் என களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் 18ஆவது ஓவரில் ஒய்டு கால் கொடுக்காததிற்காக, ஆத்திரமடைந்த தீபக் ஹூடா அம்பயரை ஆபாசமாக பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே வைரலாகியது.

முதல் இன்னிங்ஸில் 18ஆவது ஓவரை வீசிய இலங்கை அணியின் பந்துவீச்சாளர் ரஜிதா, ”அந்த ஓவரில் 5ஆவது டெலிவரியை ஸ்லோ பாலாக ஒயிட் லைனில் வீசினார். அதை ஸ்டம்புகளை விட்டு நகர்ந்து வந்து ஆடிய தீபக் ஹூடா, ஒய்டு வேண்டுமென கால் செய்தார். ஆனால் கள நடுவர் கே.என்.ஆனந்தபத்மநாபன், பேட்ஸ்மேன் ஆஃப் ஸ்டம்புகளுக்கு நகர்ந்து வந்து ஆடியதால் ஒயிடு கொடுக்காமல் தவிர்த்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹூடா விரக்தியில் தலையசைத்து நடுவரை நோக்கி “பெஹன் கே ல***” என்ற வார்த்தைகளை வீசினார். பின்னர் அடுத்த பந்தில் சிங்கிள் ஆடிவிட்டு நான்ஸ்டிரைக் பக்கம் வந்த அவர், அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.”

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக, இதனை கண்ட ரசிகர்கள், அவர் நடுவர்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக பந்துவீசினாலும், அனுபவமில்லாத காரணத்தால் போட்டி கடைசி பந்துவரை நீண்டது. முக்கியமான நேரத்தில் ஒயிட், நோ பால், சிக்சர் என வாரி ரன்களை இறைத்த ஹர்சல் பட்டேல் போட்டியின் போக்கையே மாற்றியமைத்துவிட்டார். இறுதி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற இடத்தில், அக்சர் பட்டேலிடம் பந்துகொடுக்கப்பட்டதும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. கடைசி ஓவரிலும் ஒயிட் போட்டு அழுத்தத்தை அதிகரிக்க, தன்னுடைய சிக்சரால் இந்திய அணிக்கு அதிர்ச்சிகொடுத்தார் கருணரத்னே. கடைசி 1 பந்துக்கு 4 ரன்கள் தேவை என்ற இடத்தில் 1 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார் அக்சர் பட்டேல். பரபரப்பான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வெற்றிபெற்றது இந்தியா. முக்கியமான நேரத்தில் 41 ரன்கள் விளாசிய தீபக் ஹூடா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com