ஏன் புவனேஷ் குமாரை சேர்க்கவில்லை ? - வெளிப்படையாக கூறிய விராட்

ஏன் புவனேஷ் குமாரை சேர்க்கவில்லை ? - வெளிப்படையாக கூறிய விராட்

ஏன் புவனேஷ் குமாரை சேர்க்கவில்லை ? - வெளிப்படையாக கூறிய விராட்
Published on

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் புவனேஷ் குமாரின் பங்கு குறித்து கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெறும் இந்தப்போட்டியில் கடும் மோதல் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்தியா வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது. இது ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என கடுமையாக பயிற்சி எடுத்துள்ளனர். அதேசமயம் இந்திய அணியில் அனைத்து வீரர்களும் சிறப்பான ஆட்ட வெளிப்பாடுடன் களத்தில் இருப்பதால் இந்திய அணியும் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.

இன்று நடைபெறும் போட்டியில் சிறிய இடைவேளைக்கு பின்னர் பந்துவீச்சாளர் புவனேஷ்குமார் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் டெஸ்ட் தொடரில் முற்றிலும் இடம்பெறாதிருந்தார். அதேசமயம் டெஸ்ட் தொடரில் விக்கெட்டுகளை குவித்து ஆஸ்திரேலியாவை கலங்கடித்த பும்ராவிற்கு ஒருநாள் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதால், உடல்நலன் கருதி தற்காலிக ஓய்வில் உள்ளார்.

புவனேஷ்குமார் அணியில் இன்று பங்கேற்றது தொடர்பாக பேசியுள்ள விராட் கோலி, “புவனேஷ் குமார் மீண்டும் அணியில் விளையாடுவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட் தொடர் நடக்கும்போது அவர் கடும் பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் 11 பேரில் ஒருவராக விளையாடுவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் நமது பந்துவீச்சாளர்களும் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதால், புவனேஷ் குமாருக்கான தேவை ஏற்படவில்லை” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com