’வீரர்கள் ஜெர்ஸியில் நம்பர், ஐசிசி முடிவு காமெடியா இருக்கு’: பிரெட் லீ

’வீரர்கள் ஜெர்ஸியில் நம்பர், ஐசிசி முடிவு காமெடியா இருக்கு’: பிரெட் லீ

’வீரர்கள் ஜெர்ஸியில் நம்பர், ஐசிசி முடிவு காமெடியா இருக்கு’: பிரெட் லீ
Published on

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் வீரர்களின் ஜெர்ஸியில் நம்பர் மற்றும் பெயர் இடம்பெற்றுள்ளதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ விமர்சித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், புதிய நடைமுறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வீரர்களின் சட்டையில் நம்பர் மற்றும் பெயர் இதுவரை இல்லாமல் இருந்தது. இப்போது அதை அனுமதித்துள்ளது. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆதம் கில்கிறைஸ்ட் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதையடுத்து அந்த நாட்டின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ, இந்த முடிவை விமர்சித்துள்ளார்.

அவர் கூறும்போது, ’’டெஸ்ட் தொடரில் வீரர்களின் சட்டையில் நம்பரையும் பெயரையும் பயன்படுத்துவதை கடுமையாக எதிர்க்கிறேன். இது கேலிக்கூத்தாக இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், கிரிக்கெட்டில் கொண்டு வந்துள்ள பல மாற்றங்களை வரவேற்கிறேன். ஆனால், இந்த முறையை ஏற்க முடியவில்லை’’ என்று தெரிவித்துள்ளார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com