“இந்திய அணிக்கு நிலையான கேப்டன் இருப்பது மிகவும் முக்கியம்” - முன்னாள் கிரிக்கெட் வீரர்

“இந்திய அணிக்கு நிலையான கேப்டன் இருப்பது மிகவும் முக்கியம்” - முன்னாள் கிரிக்கெட் வீரர்
“இந்திய அணிக்கு நிலையான கேப்டன் இருப்பது மிகவும் முக்கியம்” - முன்னாள் கிரிக்கெட் வீரர்

இந்திய அணிக்கு நிலையான கேப்டன் இருப்பது மிகவும் முக்கியம் என தீப் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக டீம் இந்தியா பல்வேறு வடிவங்களில் பல கேப்டன்களைக் கண்டுள்ளது.

ரோகித் ஷர்மா
கே.எல்.ராகுல்
ரிஷப் பண்ட்
ஹர்திக் பாண்டியா
ஜஸ்பிரித் பும்ரா

இது இந்திய அணியின் பிளேயிங் வெலன் பட்டியல் அல்ல! கடந்த 3 மாதங்களாக இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்திய கேப்டன்கள். இம்மாத இறுதியில் ஷிகர் தவானும் இப்பட்டியலில் இணைய உள்ளார். காயங்கள் மற்றும் கொரோனா தொடர்பான பிரச்னைகள் காரணமாக, இந்தியா பல கேப்டன்களை நியமிக்க வேண்டியிருந்தது.

முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்டர் தீப் தாஸ்குப்தா “டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் 2-3 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், பல வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியா 20-22 ஆட்டங்களில் ஆட உள்ளது, எனவே தேர்வாளர்கள் உலகக் கோப்பையில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலைத் தொடங்கியிருக்கலாம். இனிமேல் ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

அனைத்து வடிவங்களிலும் இந்திய அணிக்கு நிலையான கேப்டன் இருப்பது மிகவும் முக்கியம். சமீப காலமாக கேப்டன் பதவி சற்று நிலையற்றதாக இருக்கிறது. கடந்த சில மாதங்களில், குறிப்பாக இங்கிலாந்து டெஸ்ட் அல்லது அயர்லாந்து சுற்றுப்பயணத்தின் போது கேப்டனின் நிலை உண்மையில் நிலையற்றதாக இருந்தது.” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com