“இந்திய அணி மிகவும் சவாலாக இருக்கும்” - மனம் திறந்த சாம் பில்லிங்ஸ்

“இந்திய அணி மிகவும் சவாலாக இருக்கும்” - மனம் திறந்த சாம் பில்லிங்ஸ்

“இந்திய அணி மிகவும் சவாலாக இருக்கும்” - மனம் திறந்த சாம் பில்லிங்ஸ்
Published on

இந்தியா-இங்கிலாந்து இடையேயான ஒருநாள் போட்டி தொடர் நாளை தொடங்குகிறது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தின் போது டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள் நடைபெறுகின்றன. இதில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. முதல் ஒருநாள் போட்டி நோட்டிங்காமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரில் வெற்றி பெறும் அணி சர்வதேச தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் என்பதால் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. ஏற்கனவே டி20 தொடரை இழந்ததால், ஒருநாள் தொடரை வென்று பழித் தீர்க்க முனைப்பில் இங்கிலாந்து அணியுள்ளது. அதேசமயம் தொடரை வென்று முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் 2019ஆம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடர்பாக பேட்டியளித்த இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்கஸ், “அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கோப்பையில் பல திறமையான அணிகள் பங்கேற்க உள்ளன. குறிப்பாக இந்திய அணியில் சிறப்பான வீரர்கள் உள்ளனர். அந்த அணி அனைவருக்கும் சவாலாக இருக்கும். இளம் வீரர்களைக் கொண்ட அணியாக அது உள்ளது. எங்கள் அணியும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தும். அடுத்த வருட உலகக்கோப்பையை நினைவில் கொண்டே எங்கள் வீரர்கள் தீவிர ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்” என்றார். அத்துடன் இந்தியாவுடான அடுத்த மூன்று ஒருநாள் போட்டிகளும் கூட சவலான ஒரு தொடராக இருக்கும் என அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com