நன்றாக விளையாடியும் இடம் கிடைக்கவில்லை: சுரேஷ் ரெய்னா வருத்தம்!

நன்றாக விளையாடியும் இடம் கிடைக்கவில்லை: சுரேஷ் ரெய்னா வருத்தம்!

நன்றாக விளையாடியும் இடம் கிடைக்கவில்லை: சுரேஷ் ரெய்னா வருத்தம்!
Published on

நன்றாக விளையாடியும் அணியில் தேர்வு செய்யப்படாமல் இருந்தபோது பெரும் வலியை உணர்ந்தேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் சுரேஷ் ரெய்னா கூறினார்.
 
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 63 ரன்கள் விளாசினார். அந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. யோ யோ டெஸ்டில் தேர்வு பெறாததுதான் காரணம் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் அந்த டெஸ்டில் தேர்ச்சிப் பெற்றுள்ள ரெய்னா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து கே.எல்.ராகுல், ஜெயதேவ் உனட்கட் ஆகியோருடன் தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார்.

முன்னதாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:


நன்றாக விளையாடியும் அணியில் தேர்வு செய்யப்படாமல் இருந்தபோது பெரும் வலியை உணர்ந்தேன். அது வருத்தத்தைத் தந்தது. அப்போது எனக்கு ஆதரவாக இருந்தது என் குடும்பம்தான். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி, யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கடுமையாகப் பயிற்சி பெற்றேன். எப்போதும் நான் பிட்னஸில் கவனமாக இருப்பேன். காயம் காரணமாக, கொஞ்சம் அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டேன். இப்போது, அந்த டெஸ்டில் தேர்ச்சி பெற்ற பிறகு புதிய நம்பிக்கைப் பிறந்துள்ளது. கடந்த ஒரு மாதம் கடுமையாகப் பயிற்சி பெற்றேன். இந்தியாவுக்காக விளையாடப் போகும் ஆசை அதிகரித்திருக்கிறது. 

தென்னாப்பிரிக்காவில் நடக்கும் மூன்று டி20 போட்டியில் சிறப்பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனக்கு 31 வயதாகிறது. இப்போதும் களத்தில் இறங்கும்போது, அணியில் அறிமுகமான நாள், என்ன மனநிலையில் இருந்தேனோ, அப்படியே உணர்கிறேன். உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்பது என் ஆசை. கடுமையாக ஆடி, ஒரு நாள் போட்டியிலும் இடம் பிடிப்பேன். 

இப்போது இந்திய அணியின் மிடில் ஆர்டர் பற்றி பேச்சு அடிபட்டு வருகிறது. நான்காவது வீரராகக் களமிறங்கி நின்று ஆடுவது சாதாரண விஷயமில்லை. நான்கு அல்லது ஐந்தாவது வரிசையில் இறங்கி விளையாடுவது எனக்குப் பொருத்தமான ஒன்றாக நான் கருதுகிறேன். எனது பேட்டிங் ஸ்டைலுக்கு அந்த வரிசை சரியாக இருக்கும் என தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com