அனைத்து வகை போட்டிகளிலும் ரிஷப்-பே கீப்பராக இருக்கவேண்டும்- கங்குலி

அனைத்து வகை போட்டிகளிலும் ரிஷப்-பே கீப்பராக இருக்கவேண்டும்- கங்குலி
அனைத்து வகை போட்டிகளிலும் ரிஷப்-பே கீப்பராக இருக்கவேண்டும்- கங்குலி

ரிஷப் பண்ட் தான் அனைத்து வகை போட்டிகளுக்கு ஏற்ற விக்கெட் கீப்பராக இருப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியில் மகேந்திர சிங் தோனிக்கு பிறகு விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை சேர்க்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்காக ரிஷப் பண்ட் தற்போது இந்திய அணியில் விளையாடி வருகிறார். எனினும் அவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. தோனி பேட்டிங் மற்றும் கீப்பிங் ஆகிய இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டார். ஆகவே ரிஷப் பண்ட்டும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவேண்டும் என்ற நெருக்கடி எழுந்துள்ளது. 

இந்நிலையில் ரிஷப் பண்ட்டிற்கு ஆதாரவாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி  கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ரிஷப் பண்ட்டின் ஆட்டத்தின் மீது பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் விளையாட, விளையாட தான் கற்றுக் கொள்வார். இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது இளம் வீரர்கள் நிறையே பேர் உள்ளனர். அவர்களுக்கு கேப்டனின் ஆதரவு மிகவும் அவசியம்.

அந்தவகையில் ரிஷப் பண்ட்டிற்கு தற்போது அதிக ஆதரவு தேவைப்படுகிறது. ரிஷப் பண்ட் இந்திய அணியில் நுழையும் போது சிறப்பான ஃபார்மில் இருந்தார். என்னைப் பொருத்தவரை இவர்தான் இந்திய அணியின் அனைத்து வகை போட்டிகளுக்கும் பொருத்தமான விக்கெட் கீப்பராக இருப்பார்” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com