’காம்பீர் கிரிக்கெட் வாழ்க்கை என்னால்தான் முடிவுக்கு வந்தது’: சொல்கிறார் பாக். பந்துவீச்சாளர்!

’காம்பீர் கிரிக்கெட் வாழ்க்கை என்னால்தான் முடிவுக்கு வந்தது’: சொல்கிறார் பாக். பந்துவீச்சாளர்!
’காம்பீர் கிரிக்கெட் வாழ்க்கை என்னால்தான் முடிவுக்கு வந்தது’: சொல்கிறார் பாக். பந்துவீச்சாளர்!

கவுதம் காம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கை என்னால்தான் முடிவுக்கு வந்தது என்று பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது இர்பான் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான். 7 அடி உயரமுள்ள இவர், 60 ஒரு நாள் போட்டி களில் விளையாடி 83 விக்கெட்டுகளையும் 20 டி-20 போட்டிகளில், 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். தற்போது பாகிஸ்தானில், முதல் தரபோட்டிகளில் விளையாடி வரும் இர்பான், பாகிஸ்தான் சேனல் ஒன்றுக்கு அளித்தப்பேட்டியில், ’இந்திய வீரர் கவுதம் காம்பீர் என்னை பார்த்தால் பயப்படுவார்’ என்று தெரிவித்துள்ளார்.

’’2012 ஆம் ஆண்டு நடந்த இந்தியா -பாகிஸ்தான் தொடரில் கவுதம் காம்பீரின் விக்கெட்டை நான்கு முறை வீழ்த்தினேன். என்னைக் கண்டால் அவருக்கு பயம். வலை பயிற்சியின்போது கூட, என் முகத்தைப் பார்க்கப் பயப்படுவார். என்னால்தான் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது என நினைக்கிறேன். ஏனென்றால் அந்த தொடரை அடுத்து, அவர் குறுகிய ஓவர் போட்டிகளில் ஆடவில்லை. (அதற்கு பின் இங்கிலாந்து எதிராக ஒரே ஒரு போட்டியில்தான் காம்பீர் ஆடினார்). காம் பீரின் குறுகிய ஓவர் கிரிக்கெட் வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக ரசிகர்கள் எனக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள். எனது உயரம் காரணமாக, என் பந்தை கணிக்க முடியவில்லை என்று இந்திய வீரர்கள் என்னிடம் சொன்னார்கள்’ என்று கூறியுள்ளார்.

விராத் கோலி பற்றி கூறும்போது, ’நான், 130-135 கி.மீ வேகத்தில் பந்துவீசுவேன் என அவர் நினைத்தார். நான் 145 கி.மீ வேகத் தில் வீசியதால் அவரால் என் பந்தை தொட முடியவில்லை. அப்போது மறுமுனையில் இருந்த யுவராஜ் சிங், பஞ்சாபி மொழியில், என் பந்தை அடிக்க வேண்டாம், கட் பண்ண முயற்சி செய்யும்படி விராத் கோலியிடம் சொன்னார். ஆனால் விராத் மூன்றாவது பந்தை அடிக்க முயன்று ஆட்டமிழந்தார்’ என்று தெரிவித்துள்ளார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com