டி20 போட்டிகளில் இந்திய வீரர்கள் பேட்டிங் முறையை மாற்றவேண்டும்: பயிற்சியாளர்
இந்திய அணி வீரர்கள் டி20 போட்டியில் பேட்டிங் செய்யும் முறையை மாற்றவேண்டும் என்று பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தூர் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர், 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணி பங்கேற்கிறது. இந்தத் தொடரின் முதல் டி20 போட்டி கடந்த ஞாயிற்று கிழமை தர்மசாலவில் மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது டி20 போட்டி நாளை மொஹாலியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்திய அணி டி20 போட்டிகளில் பேட்டிங் முறையை மாற்ற வேண்டும். குறிப்பாக தொடக்கம் முதலே அதிரடியாக ஆடவேண்டும். போட்டிக்கான திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினால் எளிதில் வெற்றிப் பெற முடியும்.
ரிஷப் பந்த்தை பொருத்தவரை, அவர் தனது அனைத்து ஷாட்களையும் ஆட முயற்சி செய்யவேண்டும். அத்துடன் அவர் ஆட்டத்திற்கு ஒரு திட்டம் வகுத்து அதனை கடைபிடிக்க வேண்டும். இதனை செய்தாலே அவர் அணிக்கு சிறப்பான வீரராக மாறிவிடுவார்” எனத் தெரிவித்துள்ளார்.