’ரசிகர்களும் மீடியாவும் கொஞ்சம் ஓவராதான் போறாங்க’: சொல்கிறார் பாக். பந்துவீச்சாளர்!

’ரசிகர்களும் மீடியாவும் கொஞ்சம் ஓவராதான் போறாங்க’: சொல்கிறார் பாக். பந்துவீச்சாளர்!

’ரசிகர்களும் மீடியாவும் கொஞ்சம் ஓவராதான் போறாங்க’: சொல்கிறார் பாக். பந்துவீச்சாளர்!
Published on

இந்தியா- பாகிஸ்தான் போட்டியை மீடியாவும் ரசிகர்களும் மிகைப்படுத்துகிறார்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமிர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா-பாகிஸ்தான் போட்டி, மான்செஸ்டரில் இன்று நடக்கிறது. இதற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. உலகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்கள் இந்தப் போட்டியை காண மான்செஸ்டர் வந்துள்ளனர்.

உலக கோப்பையில், இந்திய அணி இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றது இல்லை. அதைத் தக்க வைக்கும் நோக்கில் இந்திய வீரர்கள் இன்று ஆக்ரோஷம் காட்டுவார்கள். அந்த வரலாற்றை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவார்கள் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இந்நிலையில், இந்தப் போட்டியை மீடியாவும் ரசிகர்களும் மிகைப்படுத்துவதாக பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமீர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, ‘’கிரிக்கெட் வீரர்களுக்கு ஒவ்வொரு போட்டியும் சமமானதுதான். எல்லா போட்டியையும் வெல்ல வேண்டும் என்று நினைத்தே ஆடுகிறார்கள். ஆனால், இந்தியா- பாகிஸ்தான் போட்டியை, இரண்டு நாட்டிலும் மீடியா மிகைப்படுத்தி பேசுகிறது. ரசிகர்கள் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் இதுபற்றி மிகைப்படுத்துகிறார்கள். இது தேவையில்லாத ஒன்று. எங்களை பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியுமே முக்கியம்.  

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்தி மீண்டும் ஃபார்முக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனது அம்மா நஸிம் அக்தர் மார்ச் மாதம் இறந்துவிட்டார். அவர் ஒவ்வொரு போட்டியிலும் நான் 5 விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அவர் மறைந்த பின் அதை நிறைவேற்றி இருக்கிறேன். அதனால்தான் ஐந்து விக்கெட் வீழ்த்தியதும் கண்ணீர் விட்டு அழுதேன். சொர்க்கத்தில் இருந்து என் அம்மா என்னை வாழ்த்துவார் என்று நம்புகிறேன். அதே நேரம் இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் வலிமையாக ஆட வேண்டும் என்று அவர் சொல்வார். அதன்படியே இன்றைய போட்டியிலும் விளையாடுவேன்’’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com