டெஸ்ட் ரேங்க் ; இங்கிலாந்து 2, நியூஸிலாந்து 4.. என்ன இது ? - மைக்கெல் வாகன் காட்டம்

டெஸ்ட் ரேங்க் ; இங்கிலாந்து 2, நியூஸிலாந்து 4.. என்ன இது ? - மைக்கெல் வாகன் காட்டம்
டெஸ்ட் ரேங்க் ; இங்கிலாந்து 2, நியூஸிலாந்து 4.. என்ன இது ? - மைக்கெல் வாகன் காட்டம்

ஐசிசி-யின் டெஸ்ட் அணிகள் தரவரிசை தொடர்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் வாகன் கடுமையாக சாடியுள்ளார்.

ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் வாரியம்) டெஸ்ட் அணிகள் தரவரிசையில் 1. இந்தியா 2. நியூஸிலாந்து 3.தென் ஆப்ரிக்கா 4.இங்கிலாந்து 5.ஆஸ்திரேலியா 6.இலங்கை 7.பாகிஸ்தான் 8.வெஸ்ட் இண்டீஸ் 9.பங்களாதேஷ் 10.ஆப்கானிஸ்தான் ஆகியவை உள்ளன.

இந்த தரவரிசை பட்டியல் குறித்து மைக்கெல் வாகன் சில கேள்விகளை எழுப்பி குறை கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஐசிசியின் நேர்மையை கண்டு நான் இறந்தே போய்விடுவேன் என தெரிவித்துள்ளார். ஐசிசியை சரியான குப்பை என தான் நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நியூஸிலாந்து அணி கடந்த இரண்டு வருடங்களில் சில தொடர்களை மட்டுமே வென்றுள்ளதாகவும், ஆனால் அவர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் மைக்கெல் வாகன் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் மட்டுமே தொடர்களை வென்றிருப்பதாகவும், ஆசஸ் தொடரை அவர்கள் சமன் மட்டுமே செய்ததாகவும் கூறியிருக்கிறார். இதுதவிர அயர்லாந்து அணியை வென்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு சில வெற்றிகளை மட்டுமே பெற்ற இங்கிலாந்து அணி 4-வது இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் சிறப்பாக டெஸ்ட் தொடர்களில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 5ஆம் இடத்தில் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

உலக அளவில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி தரமாக விளையாடுவதாகவும், அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை எனக் கூறியுள்ளார். அதேபோன்று இந்தியாவிற்கு அடுத்தப்படியாக, ஆஸ்திரேலியாவே சிறப்பாக விளையாடுவதாகவும், ஆனால் அவர்கள் தரவரிசையில் பின் தள்ளப்பட்டிருப்பதாகவும் குறைகூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com