ஜூலை 31, 2025 | இந்த ராசிக்கு மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.. இன்றைய ராசிபலன்கள்!
மேஷம் ராசி
வருமான உயர்வு குறித்த முயற்சிகள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோகத்தில் பொறுமையை கையாள்வது நல்லது. வர்த்தகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். குழப்பம் விலகும் நாள்.
ரிஷபம் ராசி
புதுவிதமான திட்டங்களை மனதில் உருவாக்குவீர்கள். கொடுக்கல் வாங்கலில் திருப்தியான சூழல் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்குவீர்கள். தன வரவுகளில் இருந்த தாமதம் குறையும். அரசு பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பாராட்டு கிடைக்கும் நாள்.
மிதுனம் ராசி
பேச்சு திறமைகள் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் ஒத்துழைப்புகள் உருவாகும். தந்தைவழி உறவினர்கள் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். கடன் தொடர்பான சிந்தனைகள் மனதில் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். போட்டி நிறைந்த நாள்.
கடகம் ராசி
நண்பர்களுடன் கலந்துரையாடி மனம் மகிழ்வீர்கள். சிந்தனைப்போக்கில் சில மாற்றம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றங்களும், மகிழ்ச்சியான தருணங்களும் அமையும். தொழில் தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். மனதில் இருந்த கவலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கல்வி பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். அமைதி வேண்டிய நாள்.
சிம்மம் ராசி
பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனதளவில் இருந்த கவலைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் விலகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் மாற்றம் உருவாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆசைகள் மேம்படும் நாள்.
கன்னி ராசி
மனதில் புது விதமான புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள் உத்தியோகத்தில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். நுட்பமான சிந்தனைகள் மூலம் பாராட்டுக்கள் கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.
துலாம் ராசி
உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் நிமித்தமான பயணங்களால் நன்மைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீக தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மனை சார்ந்த செயல்களில் ஆதாயம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
விருச்சிகம் ராசி
மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இழுபறியான பிரச்சனைகளுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் அனுசரித்துச் செல்வதன் மூலம் மேன்மை உண்டாகும். வியாபார பணிகளில் உடல் உழைப்பு கூடுதலாக இருக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இன்பம் நிறைந்த நாள்.
தனுசு ராசி
சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். தொழில்நுட்ப கருவிகளால் விரயம் உண்டாகும். பரிசு கிடைக்கும் நாள்.
மகரம் ராசி
கல்வி பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். நண்பர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் முன்கோபம் இன்றி விவேகத்துடன் செயல்படவும். தற்பெருமையான பேச்சுகளை குறைத்துக்கொள்ளவும். உத்தியோகம் விஷயங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. வாகன பராமரிப்பு தொடர்பான செலவுகள் உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.
கும்பம் ராசி
நினைத்த சில பணிகளை அலைச்சல்களுக்கு பின்பு முடிப்பீர்கள். மனம் விட்டு பேசுவதன் மூலம் கவலைகள் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த சாதகமான சூழல்கள் அமையும். துன்பம் மறையும் நாள்.
மீனம் ராசி
மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் உருவாகும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நுட்பமான சிந்தனைகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். கற்பனை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
1. 31:7:2025._ மங்களகரமான விசுவாவசு வருடம் ஆடி மாதம் 15ந் தேதி வியாழக் கிழமை
2. திதி: நாள் முழுவதும் சப்தமி
3. நட்சத்திரம்: இன்று நாள் முழுவதும் சித்திரை நட்சத்திரம்
4. ராகு காலம் : மதியம் 1:30மணி முதல் 3 மணி வரை.
5. எமகண்டம் காலை 6 மணி முதல் 7:30 மணி வரை.
6. குளிகை காலை 9 மணி முதல் 10:30 மணி வரை
7. நல்ல நேரம்: காலை 9:15 மணி முதல் 10:15மணி வரை
8. சூலம்: தெற்கு
9. யோகம் : நாள் முழுவதும் சித்த யோகம்
10. சந்திராஷ்டமம் : நாள் முழுவதும் பூரட்டாதி நட்சத்திரம்