ஜூலை 30, 2025 |இந்த ராசிக்கு சமூக வாழ்க்கையில் மரியாதை அதிகரிக்கும்.. இன்றைய ராசிபலன்கள்..!
மேஷம் ராசி
சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வித்தியாசமான அணுகுமுறைகளால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். பணிபுரியும் இடத்தில் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கல்வியில் மேன்மை ஏற்படும். அனுபவம் கிடைக்கும் நாள்.
ரிஷபம் ராசி
சில பிரச்சனைகளுக்கு அனுபவ அறிவு கை கொடுக்கும். அலுவலகத்தில் பொறுப்பறிந்து செயல்படுவீர்கள். உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவார்கள். பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபார பணிகளில் இருந்து வந்த மந்தநிலை குறையும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். சிக்கல் நிறைந்த நாள்.
மிதுனம் ராசி
விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை உருவாக்கும். ஆன்மீகப் பணிகளை மேற்கொள்வீர்கள். எழுத்துத் துறைகளில் சாதகமான சூழல்கள் உருவாகும். வியாபார ஒப்பந்தங்களில் கவனம் வேண்டும். பிடிவாத குணத்தினை குறைத்துக் கொள்வது நன்மையை உருவாக்கும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அலைச்சல் நிறைந்த நாள்.
கடகம் ராசி
மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருக்கவும். ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். நினைத்த சில செயல்களில் தாமதம் ஏற்படும். தந்தையிடம் அனுசரித்து செல்லவும். கல்வி தொடர்பான சில விரயங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் கவனம் வேண்டும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. சுகம் நிறைந்த நாள்.
சிம்மம் ராசி
செய்கின்ற முயற்சிக்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். தோற்ற பொழிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதர வழியில் ஆதரவுகள் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய நட்புகளால் உற்சாகம் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.
கன்னி ராசி
வியாபாரத்தில் லாபம் மேம்படும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கல்வியில் இருந்த குழப்பங்கள் விலகும். சமூக வாழ்க்கையில் மரியாதை அதிகரிக்கும். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுவீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவுகள் மேம்படும். சிக்கல்கள் விலகும் நாள்
துலாம் ராசி
கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உணவு சம்பந்தப்பட்ட துறைகளில் மதிப்புகள் உயரும். வியாபார அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். புதுவிதமான இலக்குகள் பிறக்கும். ரகசிய பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
விருச்சிகம் ராசி
நீண்ட நாள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறீர்கள். மாமன் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படுவது சிக்கல்களை குறைக்கும். மனதளவில் வித்தியாசமான சிந்தனைகள் பிறக்கும். பயண செயல்களில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். கால்நடைகளால் சில விரயங்கள் ஏற்படும். புதிய வீடு வாங்குவது சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். செலவு நிறைந்த நாள்.
தனுசு ராசி
பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். அரசு விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் சில அலைச்சல்களால் புதிய அனுபவம் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மேன்மை உண்டாகும். மனதளவில் புதிய தைரியம் பிறக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
மகரம் ராசி
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். வெளிவட்டத்தில் மதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் தடைப்பட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். சிக்கல்கள் குறையும் நாள்
கும்பம் ராசி
சிந்தித்து செயல்படுவதன் மூலம் தேவையற்ற பயணங்களை தவிர்க்க முடியும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் மூலம் மாற்றங்கள் உருவாகும். உத்தியோக பணிகளில் ஆர்வம் இன்மை உண்டாகும். சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். மனதளவில் ஒரு விதமான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர் இடத்தில் கனிவு வேண்டும். லாபம் நிறைந்த நாள்.
மீனம் ராசி
விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உடலில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். மேலதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். செயல்களில் நிதானத்தை கையாள்வது நல்லது. ஆதரவு கிடைக்கும் நாள்.
மங்களகரமான விசுவாவசு வருடம் ஆடி மாதம் 14 ந் தேதி புதன் கிழமை
1. திதி: நாள் முழுவதும் ஷஷ்டி திதி
2. நட்சத்திரம்: இன்று இரவு 1152 மணி வரை ஹஸ்தம் நட்சத்திரம் பிறகு சித்திரை நட்சத்திரம்
3. ராகு காலம் : மதியம் 12:30மணி முதல் 1:30 மணி வரை.
4. எமகண்டம் காலை 7:30மணி முதல் 9 மணி வரை.
5. குளிகை காலை 10:30 மணி முதல் 12 மணி வரை
6. நல்ல நேரம்: காலை 9:15 மணி முதல் 10:15மணி வரை
7. சூலம் : வடக்கு
8. யோகம் : இரவு 11;52 மணி வரை மரண யோகம்
9. சந்திராஷ்டமம் : இரவு 11:52 மணி வரை சதயம் நட்சத்திரம் பிறகு பூரட்டாதி நட்சத்திரம்