இன்றைய ராசிபலன்கள் 
16-08-2025
இன்றைய ராசிபலன்கள் 16-08-2025pt

ஆக.16, 2025 | இந்த ராசிக்கு இன்று அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும்... இன்றைய ராசிபலன்கள்!

Rasi Palan | இன்றைய ராசிபலன்களை நமக்கு கணித்து தந்தவர், ஜோதிட ரத்னாகரம் பிரம்மஸ்ரீ செ.பாலசந்தர் - மண்ணச்சநல்லூர்
Published on

மேஷம் ராசி

உறவினர்கள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் சில மாற்றம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நெருக்கடியான சூழல்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் பிறக்கும். உத்தியோகத்தில் அமைதியான சூழல் நிலவும். மனை மற்றும் வாகன விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

ரிஷபம் ராசி

எதையும் சமாளிக்கும் திறமை பிறக்கும். சக ஊழியர்கள் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். வரவு நிறைந்த நாள்.

மிதுனம் ராசி

ஆபரண விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த வேறுபாடுகள் மறையும். முகத்தில் பொலிவுகள் மேம்படும். புதியவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். வியாபாரத்தில் தவறிய சில வரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.

கடகம் ராசி

வரவு செலவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. வியாபார ரகசியங்களில் கவனத்துடன் இருக்கவும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. உடன் இருப்பவர்களிடம் அதிக உரிமை கொள்வதை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். முயற்சிகள் ஈடேறும் நாள்.

சிம்மம் ராசி

திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சந்தை நிலவரங்களை அறிந்து முன்னேற்றத்தை ஏற்படுத்துவீர்கள். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். வெளிப்படையான குணத்தின் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். துணைவரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கோப்புகளை கையாள்வதில் கவனம் வேண்டும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் அமையும். ஆதரவு நிறைந்த நாள்.

கன்னி ராசி

நினைத்த பணிகளை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நவீன அணுகுமுறையால் வியாபாரத்தில் முன்னேற்றத்தினை காண்பீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். அனுபவ அறிவால் சில மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். அமைதி நிறைந்த நாள்.

துலாம் ராசி

உறவுகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பொழுதுபோக்கு செயல்களால் கையிருப்புகள் குறையும். கலைப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.

விருச்சிகம் ராசி

அலுவலக பணிகளில் துரிதத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாக அமையும். மனதளவில் புதுவிதமான தேடல்கள் கிடக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சேமிப்புகள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். செயல்பாடுகளில் சில மாற்றம் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.

தனுசு ராசி

எதிர்பாராத சில பயணம் மூலம் உடலில் சோர்வுகள் உண்டாகும். தவறிய சில பணிகள் மீண்டும் செய்வதற்கான சூழல்கள் அமையும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். பணிகளில் திறமைக்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். விவேகம் வேண்டிய நாள்.

மகரம் ராசி

கூட்டாளிகளின் ஆதரவுகளால் நன்மைகள் ஏற்படும். வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். கல்வியில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளின் அறிமுகங்கள் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.

கும்பம் ராசி

உத்தியோக ரீதியான பயணங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். போட்டிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் ஆதாயம் மேம்படும். கால்நடைகள் மீதான ஈர்ப்புகள் மேம்படும். பொது வாழ்வில் சில மாற்றமான தருணங்கள் அமையும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.

மீனம் ராசி

நண்பர்களின் வட்டம் விரிவடையும். குடும்பத்தில் ஒத்துழைப்புகள் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். வேலையாட்கள் இடத்தில் சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோக பணிகளில் சற்று கவனத்தோடு இருக்க வேண்டும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.

1. தேதி: 16:8:2025. மங்களகரமான விசுவாவசு வருடம் ஆடி மாதம் 31 ந் தேதி சனிக் கிழமை

2. திதி : இரவு 11:33 மணி வரை அஷ்டமி திதி பிறகு நவமி திதி

3. நட்சத்திரம் : காலை 8:26 மணி வரை பரணி நட்சத்திரம் பிறகு கார்த்திகை நட்சத்திரம்

4. ராகு காலம் : காலை 9 மணி முதல் 10:30மணி வரை.

5. எமகண்டம் : மாலை 1:30 மணி முதல் 3 மணி வரை.

6. குளிகை : காலை 6 மணி முதல் 7:30 மணி வரை

7. நல்ல நேரம்: காலை 7:45மணி முதல் 8:45 மணி வரை

8. சூலம்: கிழக்கு

9. யோகம்: காலை 8:26 மணி வரை சித்த யோகம் பிறகு அமிர்த யோகம்

10. சந்திராஷ்டமம் : காலை 8:26 மணி வரை ஹஸ்தம் நட்சத்திரம் பிறகு சித்திரை நட்சத்திரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com