இன்றைய ராசிபலன்கள்
13-08-2025
இன்றைய ராசிபலன்கள் 13-08-2025pt

ஆக.15, 2025 | இந்த ராசிக்கு இன்று சுப காரிய முயற்சிகள் கைகூடி வரும்... இன்றைய ராசிபலன்கள்!

Rasi Palan | இன்றைய ராசிபலன்களை நமக்கு கணித்து தந்தவர், ஜோதிட ரத்னாகரம் பிரம்மஸ்ரீ செ.பாலசந்தர் - மண்ணச்சநல்லூர்
Published on

மேஷம் ராசி

எதிர்காலம் சார்ந்து சில பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். பிற மொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். பழைய பிரச்சனைகளால் பணியில் சில மாற்றம் ஏற்படும். புதுவிதமான கனவுகள் தோன்றும். வசதிகள் மேம்படும் நாள்.

ரிஷபம் ராசி

பயணங்கள் மூலம் சில அனுபவங்கள் கிடைக்கும். பழைய நினைவுகளால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். எதிராக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். உறவுகள் வழியில் நெருக்கடிகள் உண்டாகும். சக ஊழியர்களால் மன அமைதி ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல்கள் ஏற்படும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். தோல்வி மறையும் நாள்.

மிதுனம் ராசி

அனுசரித்து செல்வதன் மூலம் பகைமையை தவிர்க்கலாம். பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் விவேகத்துடன் செயல்பட்டால் நம்பிக்கை அதிகரிக்கும். சுப காரிய முயற்சிகள் கைகூடி வரும். வியாபார பணிகளில் சில மாற்றம் ஏற்படும். வாகன மாற்ற எண்ணங்கள் உண்டாகும். பாகப்பிரிவினைகளில் தெளிவுகள் உண்டாகும். சுபம் நிறைந்த நாள்.

கடகம் ராசி

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பணி நிமித்தமான புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்கள் கருத்துக்களுக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். நண்பர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். கலகலப்பான பேச்சுக்களால் எல்லோரையும் கவருவீர்கள். வழக்குகளில் எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்

சிம்மம் ராசி

மனதில் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை தோன்றி மறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் நிதானத்தை கையாள்வது நல்லது. உடன் இருப்பவர்களிடத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உழைப்பு நிறைந்த நாள்.

கன்னி ராசி

குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். நயமான பேச்சுக்களால் பிரச்சனைகள் குறையும். கால்நடை விஷயங்களில் கவனம் வேண்டும். மேல் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். விருப்பம் நிறைந்த நாள்.

துலாம் ராசி

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் இருந்த வேறுபாடுகள் மறையும். கூட்டாளிகள் வழியில் மறைமுக ஒத்துழைப்புகள் கிடைக்கும். தடைபட்ட சில கடன் பிரச்சனைகள் தீரும். உயர் அதிகாரிகள் வழியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். உதவி கிடைக்கும் நாள்

விருச்சிகம் ராசி

உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனைத் திறனில் மாற்றம் ஏற்படும். ஆசிரியர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். நேர்மை உண்டான மதிப்புகள் கிடைக்கும். அரசு வகையில் ஆதாயம் அடைவீர்கள். வரவு நிறைந்த நாள்.

தனுசு ராசி

முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வெளிவட்டத்தில் மதிப்புகள் ஏற்படும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். ஆன்மீக தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் தனித்திறமைகளை வெளிப்படுத்திவீர்கள். நன்மை நிறைந்த நாள்.

மகரம் ராசி

எதிலும் சிந்தித்து செயல்படவும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உடன் இருப்பவர்களிடம் வளைந்து கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். நீண்ட நேரம் கண்விழிப்பது தவிர்க்கவும். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை உண்டாகும். வியாபாரம் சார்ந்த அலைச்சல்கள் மேம்படும். அமைதி வேண்டிய நாள்

கும்பம் ராசி

வியாபாரத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்புகள் மேம்படும். கணவன், மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஆதரவு ஏற்படும். விவேகம் நிறைந்த நாள்.

மீனம் ராசி

சிந்தனை போக்கில் மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் ஏற்படும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். செயல் திறனில் இருந்த மந்த தன்மை விலகும். தற்பெருமையான விஷயங்களை குறைத்துக் கொள்வது நல்லது. வெளிவட்டத்தில் செல்வாக்கு உயரும். திறமை வெளிப்படும் நாள்.

1. தேதி: 158:2025. மங்களகரமான விசுவாவசு வருடம் ஆடி மாதம் 30 ந் தேதி வெள்ளிக் கிழமை

2. திதி : நாள் முழுவதும் ஸப்தமி திதி

3. நட்சத்திரம் : காலை 10:04மணி வரை அஸ்வினி நட்சத்திரம் பிறகு பரணி நட்சத்திரம்

4. ராகு காலம் : காலை 10:30மணி முதல் 12மணி வரை.

5. எமகண்டம் : மாலை 3 மணி முதல் 4:30மணி வரை.

6. குளிகை: காலை 7:30 மணி முதல் 9 மணி வரை

7. நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10:15 மணி வரை

8. சூலம்: மேற்கு யோகம் காலை 11:38 மணி வரை அமிர்த

9. யோகம்: பிறகு சித்த யோகம்

10. சந்திராஷ்டமம் : காலை 10;04மணி வரை உத்திரம் நட்சத்திரம் பிறகு ஹஸ்தம் நட்சத்திரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com