ஆகஸ்ட் 07, 2025 | இந்த ராசிக்கு இன்று கொடுக்கல்-வாங்கலில் லாபம் உண்டாகும்... இன்றைய ராசிபலன்கள்!
மேஷம் ராசி
உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலமான சூழல் ஏற்படும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வேலை மாற்றம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உருவாகும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். ஊக்கம் நிறைந்த நாள்.
ரிஷபம் ராசி
மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கமிஷன் துறைகளில் லாபம் ஏற்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப மேன்மை ஏற்படும். சகோதரர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். மறைமுக திறமையால் மதிப்புகள் உயரும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். அமைதி வேண்டிய நாள்.
மிதுனம் ராசி
எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பணிகளில் சில சாதகமான சூழல் உண்டாகும். மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். கூட்டாளிகள் இடத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தம்பதிகளுக்கிடையே நெருக்கங்கள் அதிகரிக்கும். உதவிகள் செய்யும் நாள்.
கடகம் ராசி
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தொழில் சார்ந்த எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். ஓய்வு நிறைந்த நாள்.
சிம்மம் ராசி
தடைப்பட்டுவந்த தனவரவுகள் கிடைக்கும். மாணவர்கள் பாடங்களில் கவனத்துடன் படிக்கவும். கொடுக்கல்-வாங்கலில் லாபகரமான சூழ்நிலைகள் காணப்படும். வியாபாரத்தில் முதலீடுகள் மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். பிள்ளைகளால் அலைச்சல்களும் சிறு சிறு விரயங்களும் உண்டாகும். மறதி நிறைந்த நாள்.
கன்னி ராசி
உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். தந்தை வழி உறவினர்களின் ஆதரவுகள் மனதிற்கு திருப்தி ஏற்படுத்தும். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். ஜெயம் நிறைந்த நாள்.
துலாம் ராசி
உடன் பிறந்தவர்கள் வழியில் சாதகமான சூழல் ஏற்படும். சங்கீத பணிகளில் இருப்பவர்களுக்கு தனவரவுகள் மேம்படும். வழக்குகள் பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
விருச்சிகம் ராசி
பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். முகத்தில் இருந்த கவலைகள் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் நட்பு வட்டம் விரிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடல்நலம் சீராகும். சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பகை மறையும் நாள்.
தனுசு ராசி
பிரபலமானவர்களின் சந்திப்புகள் கிடைக்கும். சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. வாகன பயணங்களால் மாற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகளின் குணம் அறிந்து செயல்படுவீர்கள். வருமான விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். உணர்வுகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான சிந்தனைகள் பிறக்கும். உத்தியோக பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.
மகரம் ராசி
தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். புதிய விஷயங்கள் கற்பதில் அலைச்சல்கள் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த பொறுப்புகள் படிப்படியாக குறையும். தடை விலகும் நாள்.
கும்பம் ராசி
மேல் அதிகாரிகள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். சிக்கனமாக செயல்படுவதால் நெருக்கடிகள் குறையும். பெரிய மனிதர்களின் மறைமுக ஆதரவுகள் மூலம் தீர்வுகள் கிடைக்கும். கடன் வாங்கி முதலீடு செய்வதை தவிர்க்கவும். இணைய பணிகளில் வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைகளில் புதுமைகள் பிறக்கும். வரவு நிறைந்த நாள்.
மீனம் ராசி
தன வரவுகளால் செல்வ வளம் மேம்படும். தொழில் நிமித்தமான பயணங்கள் சாதகமாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பீர்கள். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். தடைப்பட்ட கட்டிடப் பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். ஆசை பிறக்கும் நாள்.
1. தேதி: 7:8:2025. மங்களகரமான விசுவாவசு வருடம் ஆடி மாதம் 22 ந் தேதி வியாழக்கிழமை
2. திதி: மதியம் 2 :45 மணி வரை திரயோதசி பிறகு சதுர்த்தசி
3. நட்சத்திரம்: மாலை 3 மணி வரை பூராடம் பிறகு உத்திராடம் நட்சத்திரம்
4. ராகு காலம் : மதியம் 1:30மணி முதல் 3 மணி வரை.
5. எமகண்டம் காலை 6மணி முதல் 7:30 மணி வரை.
6. குளிகை காலை 9மணி முதல் 10:30 வரை
7. நல்ல நேரம்: காலை 10:45 மணி முதல் 11:45 மணி வரை
8. சூலம் : தெற்கு
9. யோகம் : முழுவதும் சித்தயோகம் சந்திராஷ்டமம் : மாலை
10. ரோஹிணி நட்சத்திரம் பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரம்


