செப்டம்பர் 4, 2025 | இந்த ராசிக்கு இன்று வியாபாரம் விருத்தி அடையும்... இன்றைய ராசி பலன்கள்!
12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் (செப்டம்பர் 4, 2025 ஆம் தேதி ) என்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்....
மேஷம்
அலுவலகத்தில் பொறுமையுடன் செயல்படவும். கடன் விஷயங்களால் வருத்தங்கள் நேரிடும். பயனற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய நபர்களால் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும். தம்பதிகளுக்குள் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். பொறுமை காணவேண்டிய நாள்.
ரிஷபம்
பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகள் வெற்றி அடையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகள் சீராகும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.
மிதுனம்
சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். துணைவருடன் அனுசரித்துச் செல்லவும். அரசால் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். தன்னம்பிக்கை காணவேண்டிய நாள்.
கடகம்
காப்பீடு தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டாகும். பொழுதுபோக்கு விஷயங்களால் கையிருப்புகள் குறையும். மறைமுகமான சில விஷயங்களைப் புரிந்துகொள்வீர்கள். பாகப்பிரிவினைகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். சிக்கல் விலகும் நாள்.
சிம்மம்
கால்நடைப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள், சிந்தனைகளில் சில மாற்றத்தை ஏற்படுத்தும். மனதை உறுத்திய சில பிரச்னைகளுக்குத் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். வரவு கிடைக்கும் நாள்.
கன்னி
சிறுதூரப் பயணங்களால் மாற்றம் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். புதுவிதமான ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்வி விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரம் விருத்திக்கான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அசதி விலகும் நாள்.
துலாம்
ஆடம்பரமான விஷயங்களால் நெருக்கடிகள் ஏற்படும். வருவாய் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அனுசரித்து நடந்துகொள்ளவும். விதண்டாவாதப் பேச்சுக்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. பார்வை தொடர்பான பிரச்னைகள் குறையும். புதுவிதமான உணவுகளில் ஆர்வம் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.
விருச்சிகம்
வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் புதிய ஆர்வம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் தேவையில்லாத பேச்சுக்களைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னைகள் தீரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தாமதம் குறையும் நாள்.
தனுசு
திட்டமிட்ட காரியங்களில் அலைச்சல்கள் உண்டாகும். புதுமையான விஷயங்களால் விரயம் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நன்மை பிறக்கும் நாள்.
மகரம்
விடாப்படியாகச் செயல்பட்டு நினைத்த பணிகளை முடிப்பீர்கள். கடன் பிரச்னைகள் குறையும். பாகப்பிரிவினைகளில் தெளிவு ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் வர்த்தகத்தில் ஆதாயம் அடைவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முயற்சி மேம்படும் நாள்.
கும்பம்
பெற்றோர்கள் ஒத்துழைப்பாகச் செயல்படுவார்கள். அலுவலகப் பணிகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். சமூகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உலக நடவடிக்கைகள் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
மீனம்
நெருக்கடியான சில பிரச்னைகள் குறையும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் இடத்தில் பொறுமை வேண்டும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். சுகம் நிறைந்த நாள்.
1. தேதி: மங்களகரமான விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 19ஆம் தேதி வியாழக் கிழமை
2. திதி : நாள் முழுவதும் துவாதசி திதி
3. நட்சத்திரம் : இரவு 11:24 மணி வரை உத்திராடம் நட்சத்திரம் பிறகு திருவோணம் நட்சத்திரம்
4. ராகு காலம் : மதியம் 1:30 மணி முதல் 3 மணி வரை
5. எமகண்டம் : காலை 6 மணி முதல் 7:30 மணி வரை
6. குளிகை : மதியம் 9 மணி முதல் 10:30 மணி வரை
7. நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10:30 மணி வரை
8. சூலம் : தெற்கு
9. யோகம் : நாள் முழுவதும் சித்த யோகம்
10. சந்திராஷ்டமம் : இரவு 11:24 மணி வரை மிருகசீரிஷம் நட்சத்திரம் பிறகு திருவாதிரை நட்சத்திரம்