Today Rasi Palan - August 04 2025
Today Rasi Palan - August 04 2025PT Web

ஆகஸ்ட் 04, 2025 | இந்த ராசிக்கு மனைவி வழியில் ஆதரவு பெருகும்... இன்றைய ராசிபலன்கள்!

இன்றைய ராசிபலன்களை நமக்கு கணித்து தந்தவர், ஜோதிட ரத்னாகரம் பிரம்மஸ்ரீ செ.பாலசந்தர் - மண்ணச்சநல்லூர்
Published on

மேஷம் ராசி

விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அலுவலக பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். ஆடம்பரமான பொருட்கள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.

ரிஷபம் ராசி

உறவினர்கள் வழியில் மகிழ்ச்சிகள் அதிகரிக்கும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சாதகமாகும். சஞ்சலமான விஷயங்களை தவிர்ப்பது நல்லது. தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். தெளிவுகள் பிறக்கும் நாள்.

மிதுனம் ராசி

பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். திடீர் பயணங்களால் புதிய அனுபவங்கள் ஏற்படும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உயர் கல்வியில் இருந்த குழப்பங்கள் விலகும். உலக வாழ்க்கை பற்றிய புரிதலும், புதிய கண்ணோட்டமும் பிறக்கும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். சுகம் நிறைந்த நாள்.

கடகம் ராசி

வியாபாரம் சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். வழக்கு பணிகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்து வந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்தமான சூழ்நிலைகள் காணப்படும். கடன் பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். அனுபவம் கிடைக்கும் நாள்.

சிம்மம் ராசி

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றங்கள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மனதில் மாற்றங்கள் பிறக்கும். கவலை விலகும் நாள்.

கன்னி ராசி

தம்பதிகளுக்குள் புரிதல் ஏற்படும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகளால் கவலைகள் குறையும். வியாபாரத்தில் தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். சில அனுபவங்களால் புதிய அத்தியாயங்களை உருவாக்குவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்து செல்லவும். தாமதம் மறையும் நாள்

துலாம் ராசி

இருப்பிடம் தொடர்பான பிரச்சனைகள் சற்று குறையும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் செயல்பட்டால் லாபங்கள் மேம்படும். உயர் அதிகாரிகள் பற்றிய சில புரிதல் உண்டாகும். வழக்கு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். வித்தியாசமான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். லாபம் நிறைந்த நாள்.

விருச்சிகம் ராசி

வியாபாரத்தில் திட்டமிட்ட பணிகள் நடைபெறும். அரசு வழியில் சாதகமான சூழல் அமையும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

தனுசு ராசி

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். உத்தியோகத்தில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். கமிஷன் வியாபரத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். தனவரவுகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். விவேகம் வேண்டிய நாள்.

மகரம் ராசி

மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசு சார்ந்த விஷயங்களில் உதவிகள் கிடைக்கும். கால்நடைகள் மூலம் ஆதாயம் உண்டாகும். சிறு தூரப் பயணங்கள் சென்று வருவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். மறைமுகமாக இருந்து வந்த திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். வரவு நிறைந்த நாள்.

கும்பம் ராசி

உறவினர்கள் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். ஆரோக்கிய விஷயங்களில் விழிப்புணர்வு அவசியம். உணவு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். உன்னதமான நாள்

மீனம் ராசி

பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பிரபலமானவர்களின் நட்புகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். உறவுகள் இடத்தில் மதிப்புகள் உயரும். வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். எதிலும் துணிச்சலோடு செயல்படுவீர்கள். திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

1. மங்களகரமான விசுவாவசு வருடம் ஆடி மாதம் 19ந் தேதி திங்கட்கிழமை

2. திதி : காலை 11:33 மணி வரை தசமி திதி பிறகு ஏகாதசி திதி

3. நட்சத்திரம் : காலை 9:50 மணி வரை அனுஷ நட்சத்திரம் பிறகு கேட்டை நட்சத்திரம்

4. ராகு காலம் : காலை 7:30மணி முதல் 9 மணி வரை.

5. எமகண்டம் காலை 10:30மணி முதல் 12 மணி வரை.

6. குளிகை மதியம் 1:30 மணி முதல் 3 மணி வரை

7. நல்ல நேரம்: காலை 6:15 மணி முதல் 7:15 மணி வரை

8. சூலம் கிழக்கு

9. யோகம் : காலை6:0 3மணி முதல் சித்த யோகம்

10. சந்திராஷ்டமம் : காலை 9:50மணி வரை அஸ்வினி நட்சத்திரம் பிறகு பரணி நட்சத்திரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com