இன்றைய ராசிபலன்கள் 
02-09-2025
இன்றைய ராசிபலன்கள் 02-09-2025pt news

செப்டம்பர் 3, 2025 | இந்த ராசிக்கு இன்று மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும்... இன்றைய ராசிபலன்கள்!

Rasi Palan | இன்றைய ராசிபலன்களை நமக்கு கணித்து தந்தவர், ஜோதிட ரத்னாகரம் பிரம்மஸ்ரீ செ.பாலசந்தர் - மண்ணச்சநல்லூர்
Published on

12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் (செப்டம்பர் 3, 2025 ஆம் தேதி ) என்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்....

மேஷம்

மேஷம்
மேஷம்pt web

சுபகாரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்துகொள்வீர்கள். பழக்கவழக்கங்களால் ஆதாயம் உண்டாகும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆரோக்கியமற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மறைமுகமான சில வருவாய்கள் கிடைக்கும். கவலை விலகும் நா

ரிஷபம்

ரிஷபம்
ரிஷபம்pt web

உயர் அதிகாரிகள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். உறவுகள் வழியில் அனுகூலமான சூழல் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த தடுமாற்றம் குறையும். எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கால்நடை தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வரவு மேம்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்
மிதுனம்pt web

உயர் கல்வி தொடர்பான பயணங்கள் கைகூடும். வியாபாரம் நிமித்தமான முதலீடுகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவு எடுப்பீர்கள். சேமிப்பை மேம்படுத்துவதற்கான சூழ்நிலைகள் அமையும். தாமதம் மறையும் நாள்.

கடகம்

கடகம்
கடகம்pt web

புதிய நபர்களால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்த நிலை குறையும். வெளிவட்டத்தில் செல்வாக்கு உயரும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். விவசாயம் பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும். ப்ரீதி நிறைந்த நாள்.

சிம்மம்

சிம்மம்
சிம்மம்pt web

மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு காரியங்களில் பொறுமையுடன் செயல்படவும். ஆதரவு கிடைக்கும் நாள்.

கன்னி

கன்னி
கன்னிpt web

மனை மீதான கடன் உதவி கிடைக்கும். வாகனப் பழுதுகளைச் சரி செய்வீர்கள். உறவினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். இறை சார்ந்த பயணங்கள் ஈடேறும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் திருப்தி உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.

துலாம்

துலாம்
துலாம்pt web

கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். இலக்கியம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்

விருச்சிகம்

விருச்சிகம்
விருச்சிகம்pt web

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். நீண்ட நேரம் கண்விழிப்பதைத் தவிர்க்கவும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த சோர்வுகள் விலகும். புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். வியாபாரத்தில் இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.

தனுசு

தனுசு
தனுசுpt web

மூத்த உடன்பிறப்பால் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த தடைகள் விலகும். வெளியூர் தொடர்புகளால் ஆதாயம் அடைவீர்கள். யூக வணிகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். பயிர் தொழிலில் மேன்மை உண்டாகும். மருமகன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். இன்பம் நிறைந்த நாள்.

மகரம்

மகரம்
மகரம்pt web

தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் வருகைகள் உண்டாகும். வாசனை திரவியப் பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

கும்பம்

கும்பம்
கும்பம்pt web

தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். திருப்பணிகளை செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிலும் முன் யோசனையுடன் செயல்படுவது நல்லது. மனதில் இனம்புரியாத தேடல்கள் அதிகரிக்கும். நீதித்துறையில் விவேகத்துடன் செயல்படவும். சமூகத்தில் மதிப்பு உயரும். பயணத் தொழிலில் விவேகம் வேண்டும். ஊக்கபூர்வமான நாள்

மீனம்

மீனம்
மீனம்pt web

எதிலும் சுயமாக செயல்படுவது நல்லது. நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கனிவான பேச்சுகள் நன்மதிப்பை உண்டாக்கும். அலுவலகத்தில் சிறு சிறு விமர்சனங்கள் தோன்றி மறையும். அரசு பணிகளில் விழிப்புணர்வு வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com