செப்டம்பர் 1, 2025 |இந்த ராசிக்கு இன்று வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்... இன்றைய ராசிபலன்கள்!
12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் (செப்டம்பர் 1, 2025 ஆம் தேதி ) என்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்..
மேஷம்
பலம் பலவீனங்களைப் புரிந்துகொள்வீர்கள். சமூகப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். எதிலும் முன் கோபமின்றி செயல்படவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். விதண்டாவாதப் பேச்சுகளைக் குறைத்துக் கொள்ளவும். வாடிக்கையாளர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். ஆடம்பரமான செலவுகளால் கையிருப்புகள் குறையும். விவேகம் வேண்டிய நாள்.
ரிஷபம்
இழுபறியான சில விஷயங்களைத் தீர்ப்பதற்கான சூழல் அமையும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாகச் செயல்படுவார்கள். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். புதியவர்களின் அறிமுகம் உண்டாகும். நலம் கிடைக்கும் நாள்.
மிதுனம்
உறவுகள் மத்தியில் மதிப்பு உயரும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். பணவரவுகள் சாதகமாக இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சுகம் நிறைந்த நாள்.
கடகம்
விமர்சனப் பேச்சுக்களால் செயல்களில் சில மாற்றம் ஏற்படும். தனவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். தள்ளிப்போன சில காரியங்கள் முடியும். சவாலான செயலைச் செய்வீர்கள். அக்கம்பக்கத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். அன்பு நிறைந்த நாள்.
சிம்மம்
உறவுகள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதாரம் சார்ந்த சிக்கல்களைச் சமாளிப்பீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சக ஊழியர்களால் திருப்தி ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். நன்மை நிறைந்த நாள்.
கன்னி
சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். பழைய சிக்கல்கள் விலகும். அலுவலகப் பணிகளில் துரிதம் ஏற்படும். நீண்ட நேரம் கண்விழிப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். முயற்சி ஈடேறும் நாள்.
துலாம்
பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். கால்நடைகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். மனை சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான இடமாற்றச் சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.
விருச்சிகம்
மூத்த உடன்பிறப்புகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படுவது நல்லது. கலைத்துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மருமகன் வழியில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். அமைதி கிடைக்கும் நாள்.
தனுசு
விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமை காக்கவும். வெளியூர் தொடர்பான கல்வி வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத வரவுகளால் பொருளாதாரம் மேம்படும். வியாபாரத்தில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். எதிர்மறையான விஷயங்களில் தெளிவு ஏற்படும். தடைகள் மறையும் நாள்.
மகரம்
புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துகொள்ளவும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். மனதில் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். இழுபறியான விஷயங்களுக்கு திடீர் முடிவு எடுப்பீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.
கும்பம்
சுபகாரியம் சார்ந்த முயற்சிகள் ஈடேறும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். மருத்துவப் பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் காணப்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்குச் செல்வாக்கு அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
மீனம்
ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் இடமாற்றம் சார்ந்த முயற்சிகளில் மேம்படும். மாறுபட்ட அணுகுமுறையால் சில பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். அனுபவம் கிடைக்கும் நாள்.
1. தேதி: மங்களகரமான விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 16 ந் தேதி திங்கட்கிழமை
2. திதி :நாள் முழுவதும் நவமி திதி
3. நட்சத்திரம் : இரவு 7:14 மணி வரை கேட்டை நட்சத்திரம் பிறகு மூலம் நட்சத்திரம்
4. ராகு காலம் : காலை 7:30மணி முதல் 9 மணி வரை.
5. எமகண்டம் : காலை 10:30மணி முதல் 12மணி வரை.
6. குளிகை : மதியம் 1:30ணி முதல் 3 மணி வரை
7. நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10:30 மணி வரை
8. சூலம் : கிழக்கு
9. யோகம் : இரவு 7:14 மணி வரை சித்த யோகம் பின்னர் அமிர்த யோகம்
10. சந்திராஷ்டமம் : இரவு 7:14மணி வரை பரணி நட்சத்திரம் பிறகு கார்த்திகை நட்சத்திரம்