இன்றைய ராசிபலன்கள்
இன்றைய ராசிபலன்கள்pt

ஆகஸ்ட் 06, 2025 | இன்றைய ராசிபலன்கள்!

இன்றைய ராசிபலன்களை நமக்கு கணித்து தந்தவர், ஜோதிட ரத்னாகரம் பிரம்மஸ்ரீ செ.பாலசந்தர் - மண்ணச்சநல்லூர்
Published on

மேஷம் -ராசி:

உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் புதிய நபர்கள் மூலம்ன கிடைக்கும். வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். பத்திர பணிகளில் ஆதாயம் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். குழந்தைகளின் கல்வி தொடர்பான செலவுகள் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.

ரிஷபம் - ராசி:

சொத்து சம்பந்தமான வழக்குகளில் பொறுமை வேண்டும். வேலையில் பணியாட்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். வங்கி சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். சஞ்சலமான சிந்தனைகளால் மனதில் குழப்பம் மேம்படும். மத பணிகளில் தனிப்பட்ட ஈர்ப்புகள் உண்டாகும். தொழில் சம்பந்தமான அலைச்சல் மேம்படும். ஓய்வு நிறைந்த நாள்.

மிதுனம்- ராசி:

செய்யும் செயல்களில் தடை, தாமதங்கள் உண்டாகும். எதிர்பாராத சில பயணம் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள், மேலதிகாரிகளுடன் பேசும் பொழுது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். முதலீடுகளில் சற்று சிந்தித்து செயல்படவும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.

கடகம் - ராசி:

மருத்துவ பொருட்கள் தொடர்பான விஷயங்களில் லாபங்கள் உண்டாகும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். பயனற்ற பேச்சுகளை குறைத்துக்கொள்ளவும். புதிய நபர்களிடம் அனுசரித்து செல்லவும். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் இருந்து வந்த தடைகள் குறையும். நிர்வாக பணிகளில் பொறுப்புகளும், சாதகமான சூழ்நிலைகளும் உருவாகும். அமைதி நிறைந்த நாள்.

சிம்மம் ராசி

போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். மனதில் இருக்கும் இரகசியங்களை வெளியிடுவதில் சிந்தித்து செயல்படவும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். வாகனம் தொடர்பான பயணங்கள் மூலம் மனதில் மாற்றங்கள் உருவாகும். வெற்றி நிறைந்த நாள்.

கன்னி ராசி

தொழில் நிமித்தமாக முதலீடுகள் அதிகரிக்கும். மனதை உறுத்திக்கொண்டே பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நுட்பமான சிந்தனைகள் மூலம் மேன்மை உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.

துலாம் ராசி

தந்தையின் எண்ணங்களை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபங்கள் கூடுதலாக கிடைக்கும். பகை விலகும் நாள்.

விருச்சிகம் ராசி

முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகப் பணிகளில் முயற்சிகள் கைகூடிவரும். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மனை விருத்தி சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் மேம்படும். ஜெயம் நிறைந்த நாள்.

தனுசு ராசி

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல்நிலையில் புது பொலிவு உண்டாகும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வாக்கு சாதியத்தின் மூலம் கீர்த்தி அடைவீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறைந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள். மறதி விலகும் நாள்.

மகரம் ராசி

எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளைன் எடுப்பீர்கள். திட்டமிட்ட காரியங்களில்ன எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.ன உடன் பிறந்தவர்கள்ன பற்றிய புரிதல்ன அதிகரிக்கும்.ன திறமைகளை வெளிப்படுத் வாய்ப்புகள் சாதகமாகும். சிறு தூர பயணங்களால் மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். சொத்து பிரிவினை விஷயங்களில் பொறுமையை கையாள்வது நல்லது. அனுபவம் மேம்படும் நாள்.

கும்பம் - ராசி:

எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்துவீர்கள். செயல்பாடுகளில் சுதந்திரப் போக்கு அதிகரிக்கும். குழந்தைகளின்ர குணம் அறிந்து செயல்படவும்.ர கடன் பிரச்சனைகள் குறையும். பொழுது போக்கு செயல்களால் விரயம் உண்டாகும். உறவினர்கள் வழியில் முன்னேற்றம் ஏற்படும். அசதி மறையும் நாள்.

மீனம் - ராசி: 

மனதில் முன்னேற்றத்திற்கான வழிகளை சிந்திப்பீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். கடன் பிரச்சனைகளை குறைப்பீர்கள். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் அமையும். வாகன விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்கவும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். வரவுகள் மேம்படும் நாள்.

  1. மங்களகரமான விசுவாவசு வருடம் ஆடி மாதம் 21ந் தேதி புதன் கிழமை

  2. திதி மதியம் 2:09 துவாதசி திதி பிறகு திரயோதசி நட்சத்திரம்

  3. காலை 1:43 மணி வரை மூலம் நட்சத்திரம் பிறகு பூராடம் நட்சத்திரம்

  4. ராகு காலம் : மதியம் 12மணி முதல் 1:30மணி வரை. எமகண்டம் காலை 7:30மணி முதல் 9 மணி வரை. குளிகை காலை 10:30மணி முதல் 12 வரை

  5. நல்ல நேரம்: காலை 9:15 மணி முதல் 10:15 மணி வரை சூலம் வடக்கு

  6. யோகம் : மதியம் 1:43 மணி வரை மரண யோகம் பிறகு அமிர்த யோகம் சந்திராஷ்டமம் : மதியம் 1:43மணி வரை கார்த்திகை பிறகு ரோஹிணி நட்சத்திரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com