விண்ணைத்தொட்ட சிவகோஷம்... சித்திரை திருவிழா தேரோட்டத்தில் முருகனுடன் எழுந்தருளிய உத்திராபதிஸ்வரர்!

உத்திராபதிஸ்வரர் அம்பாள், முருகனுடன் எழுந்தருளி தெருவடைத்தான் சப்பரத்தில் நான்கு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
சப்பரதேரோட்டம்
சப்பரதேரோட்டம்PT - Mathavan

திருச்செங்காட்டங்குடி உத்தராபுரீஸ்வரர் கோவில் தெருவடைதான் சப்பர தேரோட்ட நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து அமுதுபடையல் நிகழ்ச்சியும் கைலாய வாத்திய முழக்கங்களுடன் வெகு சிறப்பாக நேற்று நடைபெற்றுள்ளது.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் அமைந்துள்ளது திருச்செங்காட்டங்குடி. இங்கு பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான உத்திராபதிஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு சித்திரை மாதமும் அமுதுபடையல் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இத்திருவிழாவிற்கு முதல் நாள் இரவு உத்திராபதிஸ்வரர் கோவிலில் தெருவடைத்தான் சப்பர தேரோட்ட நிகழ்வு வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி நேற்று அமுதுபடையில் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் (ஏப்ரல் 19) இரவு உத்திராபதிஸ்வரர் அம்பாள் முருகனுடன் எழுந்தருளி தெருவடைத்தான் சப்பரத்தில் நான்கு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

சித்திரை மாதம் தொடங்கிவிட்டாலே கோவில் விழாக்கள் களைகட்டத் தொடங்கிவிடும். தேரோட்டம், பூப்பல்லக்கு, பால் குடங்கள் என்று நிறைந்திருக்கும் அத்திருவிழாக்களில் கலந்துக்கொண்டு தங்களின் பக்தியை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்துவது வழக்கம்.

அப்படியான சித்திரைத்திருவிழாவான அமுதுபடையல் திருவிழாவில், இந்த தெருவடைத்தான் சப்பரம் புகழ்பெற்ற ஒரு தேரோட்ட நிகழ்வாகும். உத்ராபதிஸ்வரர் திருக்கோவிலை சுற்றியுள்ள நான்கு மிகப்பெரிய அகன்ற தெருக்களையும் இந்த சப்பரமானது முழுவதுமாக அடைத்து ஆக்கிரமித்து வலம் வரும். அதனால் இதற்கு தெருவடைத்தான் சப்பரம் என்று பெயர்.

நேற்று முன்தின நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை நடந்த இந்த சப்பரத்தின் தேரோட்ட நிகழ்வு வெகு விமர்சியாக, மேள தாளங்களுடன் கைலாய வாத்தியங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் நடைபெற்றது.

இந்த தெருவடைத்தான் சப்பர தேரோட்ட நிகழ்வைக் கண்டு களிக்கவும் உத்ராபதிரீஸ்வரர் அருளை பெறுவதற்காகவும் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் வருகை தந்தபடி இருந்தார்கள்.

சிவகோஷங்கள் விண்ணை பிளக்க மாநிலம் முழுவதிலும் இருந்து வந்த பக்தர்கள் துணையோடு தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று அமுதுபடையில் விழா சிறப்பாக வெகு விமர்சையாக நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com