மீண்டும் மீண்டும் ஈசனின் திருவிளையாடல்.. பக்தியில் யாருக்கும் சளைக்காத சுந்தரமூர்த்தி நாயன்மார்!

”சிவ தொண்டரே... நான் ஓய்வெடுத்துக் கொள்ள நினைத்து ஒரு ஓரமாக படுத்திருக்கிறேன். இப்பொழுது வந்த நீங்கள் எனது முகத்தில் படும்படி உங்கள் காலை போடுகிறீர்களே? .... இது நியாயமா? “
சுந்தரர் திருமணகோலம்
சுந்தரர் திருமணகோலம்PT tesk

நம்பியாரூரானுக்கு விவாகம் நடக்கும் சமயம் சிவபெருமான் அவரை ஆட்கொள்ளும் எண்ணம் கொண்டு வயதான சிவனடியாராக வந்து நம்பியாரூரானுக்கு நடக்கவிருந்த விவாகத்தை நிறுத்தி அவரை தனது அடிமை என்று கூறி தன் இருப்பிடமான திருவெண்னைநல்லூருக்கு கூட்டி வந்தார். பிறகு நடந்தது என்ன...? பார்க்கலாம் வாங்க..

ரிஷபவாகனத்தில் பார்வதி தேவியுடன் சிவபெருமான் நம்பியாரூரானுக்கு காட்சி அளித்ததைக்கண்டு மெய்சிலிர்த்தார் நம்பி.

சிவபெருமானும் நம்பியை பார்த்து, “ நீ என்னை கோபத்தில் வன்முறை வார்த்தைகளால் அர்ச்சித்தாய். அதனால் இன்றுமுதல் நீ எனக்கு ‘வன்தொண்டன்’என்று அழைக்கப்படுவாய் என்றார்.

பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அத்தாஉனக் காளாய்இனி அல்லேனென லாமே.’

இதைக் கேட்டதும் நம்பிக்கு கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது. “ ஐய்யனே நான் என்ன தவம் செய்தேன்...? என்னைஅடிமையாய் ஆட்க்கொண்டமைக்கு? ” என்றவர் அங்கேயே சிவனின் மீது

‘பித்தாபிறை சூடீ..'

என்ற திருப்பதிகத்தை இயற்றினார்.

திருமணக்கூடத்தில் திருமணம் தடைபெற்று நம்பி சிவாச்சாரியாருடன் சென்றவர் சிவனடியார் ஆன செய்தியானது ஊர் முழுதும் பரவ.. திருமணகோலத்தில் இருந்த சிவாச்சாரியாரின் புதல்வியான சங்கரி நம்பியின் நினைவாகவே இருந்து சிவனடி சேர்ந்தாள் என்று புராணங்கள் கூறுகிறது.

வந்தொண்டரான நம்பியோ சிவாலயம் சிவாலயமாக சென்று சிவபெருமானை தனது திருப்பதிகங்ளால் பாடி தொழுது வந்தார். அவ்வாறு, ஒரு சமயம் நம்பி திருவதிகை சிவஸ்தலம் சென்றார். அத்திருத்தலமானது அப்பர் சுவாமிகளால் உழவாரப்பணி செய்யப்பட்ட ஸ்தலம் என்று தெரிந்ததால், அத்தலத்தின் மண்ணை மிதிக்க மனம் இல்லாமல் வெளியில் இருந்தபடியே சிவபெருமானே தரிசனம் செய்து கொண்டு அங்கு இருந்த திண்ணையில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.

அச்சமயம், சிவபெருமான் அவருடன் மறுபடி விளையாட நினைத்து தான் ஒரு வயோதிக தொண்டராக மாறி, நம்பி ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த திண்னைக்கு வந்து அமர்ந்தவரது கால்கள் நம்பியின் தலையை தொடும்படி அமர்ந்திருந்தார். நம்பி அவரிடத்தில் ”சிவ தொண்டரே.. நான் ஓய்வெடுத்துக் கொள்ள நினைத்து ஒரு ஓரமாக படுத்திருக்கிறேன். இப்பொழுது வந்த நீங்கள் எனது முகத்தில் படும்படி உங்கள் காலை போடுகிறீர்களே? .. இது நியாயமா? “ என்று கேட்டார்.

”நியாய அநியாயத்தை பற்றி என்னிடமே வினவுகிறாயா?.... சிவ தரிசனத்திற்கு வந்த நீ அந்த சிவனை பார்க்காமல் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டு என்னை கேள்வி கேட்கிறாயா?...” என்றதும் நம்பியாருக்கு சற்று சந்தேகம் எழுந்தது, “நீங்கள் யார்? ” என்றார்.

அதே போல் ஒரு பங்குனி உத்திரம் அன்று சுந்தரர் திருப்புகலூர் சென்று ஈசனை பதிகங்களால் பாடி முடித்ததும் அம்மடத்தில் இருந்த ஒரு செங்கலை தலையணையாக மாற்றிக் கொண்டு உறங்கினார். ஆனால் அத்தலையணையானது சொக்கதங்கமாக மாறி இருந்தது. அதையும் அந்த ஈசனுக்கே அர்ப்பணித்து விட்டு தனது பணியை தொடர்ந்த வண்ணம் இருந்தார். சிறிது சிறிதாக இவரது வறுமையும் நீங்கியது.

அதேபோல் திருமுதுகுன்றம் என்னும் இடத்தில் உறைந்தருளும் சிவபெருமானை பாடி துதித்தார். சிவபெருமான் சுந்தரரின் பாடலுக்காக பொன்காசுகளை பரிசாக தந்தார்.

வந்தது சிவபெருமான் தான் என்பதை உணர்ந்துக்கொண்ட சுந்தரர், ”இப்பொன்னை நீ திருவாரூரில் தந்தால், நான் பறவை நாச்சியாரிடத்தில் கொடுக்க வசதியாக இருக்கும். நான் போகும் இடமெல்லாம் இதையும் சுமந்துக்கொண்டு அல்லவா செல்லவேண்டி இருக்கிறது?” என்றார்.

சிவபெருமானும், “வந்தொண்டரே, இப்பொன்னை இதோ இருக்கும் இந்த மணிமுத்தா நதியில் இடுவீராக.. அதை பிறகு திருவாரூரில் எடுத்துக்கொள்வீராக” என்றார்.

சுந்தரரும் அப்பொன்னை நதியில் விட்டுவிட்டு, மாற்று உரை பார்க்கும் பொருட்டு ஒரு சிறு துண்சு பொன்னை கையில் வைத்துக்கொண்டார். பிறகு திருவாரூர் சென்ற சமயம் தன்கையில் இருக்கும் பொன்னை அக்குளத்தில் இட்டு மொத்த பொன்னையும் எடுத்துக்கொண்டார்.

இவ்வாறு சிவபெருமான் சுந்தரருக்கு இம்மியளவு கூட துன்பம் இல்லாதவாறு கூடவே இருந்து அவரை காத்து வந்தார்.

சுந்தரரும் பல திருத்தலங்கள் சென்று தொண்டை நாடு வந்தார். அங்கு திருக்காஞ்சி, காமக்கோட்டம் முதலிய இடங்களுக்குச் சென்று இறைவனை வழிப்பட்டார். பிறகு திருவொற்றியூர் வந்தார்.

சென்னைக்கு அருகில் இருக்கும் திருவொற்றியூரில் சுந்தரருக்கு நடந்தது என்ன? என்பதைப்பற்றி நாளை பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com