கூகுள்
கூகுள்ஸ்ரீரங்கம் கோவில்

ஸ்ரீரங்கத்தில் பெருமாள் ஏன் தெற்கு நோக்கி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் வியக்க வைக்கும் கதை

108 திவ்ய தேசத்தில் முதல் ஸ்தலம் திருவரங்கம் சுவாமியின் பெயர். ரெங்கநாதர். தாயாரின் பெயர். ரெங்கநாயகி . விமானம் : ப்ரனவாகார விமானம் (ஓம் வடிவம்) புஷ்கரணி: சந்திர புஷ்கரணி.
Published on

ஸ்ரீ ரங்கத்தில் உள்ள பெருமாள் ஏன் தெற்கு நோக்கி அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்? காரணம் தெரியுமா?

108 திவ்ய தேசத்தில் முதல் ஸ்தலம் திருவரங்கம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம்.

இது திருச்சிராப்பள்ளி அருகில் இருக்கிறது. இங்கு காவேரி ஆறு ஓடுகிறது.

சுவாமியின் பெயர். ரெங்கநாதர். தாயாரின் பெயர். ரெங்கநாயகி .

விமானம் : ப்ரனவாகார விமானம் (ஓம் வடிவம்)

புஷ்கரணி: சந்திர புஷ்கரணி.

இவ்விடத்திற்கு இப்பெருமாள் வந்ததற்கு புராணத்தில் ஒரு சரித்திரம் உண்டு.

கூகுள்
கூகுள்ரெங்கநாதர்

ஒரு சமயம் பாற்கடலில் நீர்குமிழிபோல் உருவான ரெங்கநாத பெருமாளை பிரம்மா தனது சத்தியலோகத்தில் வைத்து வழிபட்டு வந்தார். இது இப்படி இருக்க... பூலோகத்தில்(பூமி) சூரிய வம்சத்தில் பிறந்த இச்வாகு என்ற மன்னர் அயோத்தி நாட்டை ஆண்டு வந்தார். இவருக்கு சில சக்திகள் உண்டு. அதில் ஒன்று ஆகாயமார்கமாக பயணிப்பது. அப்படி இவர் ஆகாயமார்கமாக பயணித்து, நேராக சத்தியலோகம் சென்று ப்ரம்மாவை சந்தித்தார். அப்பொழுது அங்கிருந்த ரெங்கநாத பெருமாளின் மேல் ஆசைக்கொண்டு பிரம்மாவிடம் அவரை தருமாறு கேட்டு, பெற்றுக்கொண்டு பூலோகத்திற்கு எடுத்து வந்து சரையூ நதிக்கரையில் ஸ்தாபித்து அதற்கு பூஜை செய்து வந்தார்.

இவரது வம்சாவளியில் வந்தவர் தான் இராமபிரான். அவரும் சரயூ நதிக்கரையில் இருந்த ரெங்கநாதருக்கு பூஜை செய்து ஆராதித்து வந்தார்.

ராமருக்கும் இராவணனுக்கும் நடந்த யுத்தத்தில், இராவணன் அழிந்த பிறகு தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இராமபிரான் அனைவருக்கும் பரிசுகளை அளித்தார். அதில், இராவணன் தம்பி விபீஷ்ணனுக்கு, தான் வணங்கி வந்த ரெங்கநாதரை பரிசாக அளிக்கவும் , விபிஷணன் மகிழ்ந்து, அதை தனது ஸ்ரீலங்கா நாட்டிற்கு எடுத்துச்சென்றான். அச்சமயம் ஸ்ரீரெங்கத்தில் விபிஷ்ணன் சிறிது ஓய்வுக்காக ரெங்கநாதரை இறக்கி வைத்தான்.

ஸ்ரீரங்கத்தை ஆண்டு வந்த தர்மவர்மா என்னும் அரசர் விபிஷணிடத்தில், ”ரெங்கநாதர் எங்கள் நாட்டில் இருக்கட்டும், எங்களுக்காக இவரை இங்கேயே விட்டு விடுங்கள்” என்று கேட்கவும், விபிஷணன் தர்மவர்மாவிடம், “இது இராமர் எனக்காக பரிசளித்தது இதை நான் எவ்வாறு இங்கு விட்டு செல்வது? ” என்று கேட்டார், இருவரும் இது குறித்து ரெங்கநாதரிடத்திலேயே கேள்வி எழுப்பினர்.

அதற்கு ரெங்கநாதரும், விபிஷிணனிடத்தில், ”விபிஷணா.. நான் காவிரி கரையில் இருக்கவே விரும்புகிறேன். ஆனால், உனக்கு அருள் பாலிக்கும் பொருட்டு நான் லங்கையில் உன்னை பார்த்தபடி இருக்கிறேன்” என்றார், விபிஷ்ணனும், சரி, என்று கூறி, அங்கேயே விட்டு சென்றான். ஆகவே இத்தலத்தில் ரெங்கநாதர் தெற்கு நோக்கியபடி அருள்பாலித்து வருவதாக புராணங்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com