திருவள்ளூர்: கோலாகலமாக நடந்து முடிந்த சிவன் - பெருமாள் சந்திக்கும் ‘ஹரிஹரன் விழா’; பக்தர்கள் பரவசம்!

இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத நிகழ்வாக பெருமாளும் சிவனும் சந்திக்கும் பிரசித்தி பெற்ற 'ஹரிஹரன் சந்திப்பு' திருவிழா பொன்னேரியில் கோலாகலமாக நடைபெற்றது.
kovil festival
kovil festivalpt desk

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரண்ய நதி என அழைக்கப்படும் ஆரணி ஆற்றின் கரையில் உள்ள பொன்னேரி திருஆயர்பாடி பகுதியில் உள்ள கரி கிருஷ்ண பெருமாள் கோயிலின் சித்திரை பிரமோற்சவ விழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக கரி கிருஷ்ண பெருமாளும், அகத்தீஷ்வரரும் நேருக்கு நேர் சந்திக்கும் வைபவம் வெகுவிமர்சியாக நேற்று நடைபெற்றது.

devotees
devoteespt desk

இந்த அரிய நிகழ்வை காண திருவள்ளூர் மட்டுமின்றி, சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அனைவரும் பக்தி பரவசத்தோடு சாமி தரிசனம் செய்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிரீன்வேல்பேட்டை என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி, ஹரி-ஹரன் சந்திப்பால் 'ஹரிஹரன் பஜார்' என பெயர் பெற்றது.

kovil festival
kovil festivalpt desk

அகத்திய முனிவரும், பரத்வாஜ் முனிவரும் சிவனையும், பெருமாளையும் ஒரு சேர சந்திக்க வேண்டும் என ஆரணிய நதியில் தவம் இருந்ததால் சிவபெருமானும், பெருமாளும் காட்சி அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனை நினைவுபடுத்தும் விதமாக ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இந்த பிரமோற்சவ விழா நடைபெறுகிறது.

இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத நிகழ்வாக பொன்னேரியில் கொண்டாடப்படும் இந்த விழாவில், கருட வாகனத்தில் கரி கிருஷ்ண பெருமாளும், ரிஷப வாகனத்தில் அகத்தீஸ்வரும் நேருக்கு நேர் சந்திக்கும் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது கரி கிருஷ்ண பெருமாளிடம் இருந்தும் அகத்தீஸ்வரருக்கும்; அகத்தீஸ்வரரிடம் இருந்து கரி கிருஷ்ண பெருமாளுக்கும் சீர்வரிசை வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சித்திரை பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை கரி கிருஷ்ண பெருமாளின் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com