மீனத்திலிருந்து மேஷ ராசிக்கு.. ஆலங்குடியில் விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் குருபெயர்ச்சி விழா!

இன்று இரவு 11.27 மணிக்கு குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடம் பெயர இருக்கிறார்.
Abathsagayeswarar Temple In Alangudi
Abathsagayeswarar Temple In AlangudiPT web

குருபெயர்ச்சியை முன்னிட்டு குருஸ்தலமான ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

நவக்கிரகங்களில் ஒன்றான குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து வேறொரு ராசிக்கு இடம் மாறுவது வழக்கம்.

அதன் படி இன்று இரவு 11.27 மணிக்கு குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடம் பெயர இருக்கிறார். இதையொட்டி ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றி , சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com