திவ்யதேசம் - 6: நம்மாழ்வார் பாடிய அப்பக்கூடத்தான் ஸ்தலத்தின் புராணக் கதை

இத்திருத்தலம் சோழமன்னன் கரிகால சோழனால் புரனமைக்கப்பட்டது. இதற்கு திருபேர் நகர் எனவும் அப்பாலரங்கம் எனவும் அழைப்பார்கள்.
appakudathan
appakudathanwiki

108 திவ்ய தேசத்தில் நாம் இன்று காணப்போகும் திருத்தலம் அப்பக்கூடத்தான் அதாவது அப்பால ரெங்கநாதர் கோயில்.

இத்திருத்தலம் திருகாட்டுப்பள்ளி அருகில் இருக்கிறது.

தீர்த்தம் :இந்திரதீர்த்தம்

விமானம்: இந்திர விமானம்

ஸ்தல விருட்சம் : புரஷ மரம்.

”பேரேயுறைகின்ற பிரான் இன்று வந்து பேரேனேன்று என்னெஞ்சு நிறையப்புகுந்தான் காரேழ் கடலேழ் மலையேழ்லுல குண்டும் ஆராவயிற்றானை அடங்கப்பிடித்தேனே” என்று நம்மாழ்வார் பாடியுள்ள ஸ்தலம்

இத்திருத்தலம் சோழமன்னன் கரிகால சோழனால் புரனமைக்கப்பட்டது. இதற்கு திருபேர் நகர் எனவும் அப்பாலரங்கம் எனவும் அழைப்பார்கள்.

மூலவர் பெயர்: அப்பக்குடத்தான்

தாயார்: இந்திரா தேவி, கமலவல்லி தாயார்.

”அப்பம் கலந்த சிற்றுண்டி* அக்காரம் பாலிற் கலந்து*

சொப்பட நான் சுட்டு வைத்தேன்* தின்னல் உறுதியேல் நம்பி” என்று பெரியாழ்வார் திருமொழியில்

இத்திருத்தலத்தைப்பற்றி பாசுரம் இயேற்றப்பட்டுள்ளது.

திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார். திருமங்கை ஆழ்வார் போன்றவர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.

புராணக்கதை

உபமன்யூ என்ற அரசன் துர்வாச முனிவரால் , தினமும் 1000 பேருக்கு அன்னதானம் செய்யவேண்டும் எனவும் துர்வாசர் சாபம் தந்தார்.

தினமும் அவன் 1000 அன்னதானம் செய்துவந்த சமயம், இவனுக்கு சாபவிமோட்சம் அளிக்கவேண்டும் என்று கருதிய பெருமாள் மனித உருவில் அன்னதானம் பெற வந்தார், வந்தது மட்டும் அல்லாமல், 1000 பேருக்கு சமைத்த அன்னத்தை அவர் ஒருவரே சாப்பிட்டதுடன் அல்லாமல், இன்னும் பசி எடுக்கிறது, ஆகையால் எனக்கு ஒரு குடம் நெய் அப்பம் வேண்டும்” எனவும் கேட்கவும், உபமன்யூவும் அவருக்காக ஒரு குடம் நிறைய நெய் அப்பத்தை செய்து தந்துள்ளான். அதை வாங்கிகொண்டு அவனுக்கு சாபவிமோசனம் அளித்ததாக புராண கதை உள்ளது.

இதைத் தவிர புராணத்தில் வேறொரு கதையும் உள்ளது. ஒருமுறை கமலவல்லி தாயார், பெருமாளிடத்தில் தனக்கு பாரிஜாத மலர்வேண்டும் எனகேட்டுள்ளார். பாரிஜாத மலரானது இந்திரலோகத்தில் இருந்ததால் பெருமாள் கமலவல்லி தாயாருக்காக பாரிஜாதத்தை பறித்து வருவதற்காக இந்திரலோகம் சென்ற சமயம், இந்திரன் அவருக்கு பாரிஜாதம் தர மறுத்ததுடன் தன்னிடம் இருந்த வஜ்ராயுதத்தை பெருமாளின் மேல் ஏவியும் விட்டுள்ளான். பெருமாள் வஜ்ராயுத்தை தன் விரலிடுக்கில் அழுந்த பிடித்து, அவற்றை தானே வைத்துக்கொண்டும் விட்டார். ஆகவே ரெங்கநாதரின் ஒரு கையில் அப்பக்கூடையும் மறு கையில் வஜ்ராயுதத்தையும் கையில் பிடித்தபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தப்படி இருக்கிறார்.

பிராத்தனை: குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

நாமும் இத்திருத்தலம் சென்று அப்பக்கூடத்தானை தரிசனம் செய்து அவன் அருள் பெறலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com