ராமன் வாலியை மறைந்து தாக்கியது ஏன்? வாலியின் பலம் அதிகரித்தது எப்படி?

ராமாயணத்தில் வாலி யார்? சுக்ரீவனுக்கும் வாலிக்கும் என்ன சம்பந்தம்? ஏன் சுக்ரீவனை வாலி நாட்டை விட்டு துறத்தினான்? வாலியை ஏன் ராமன் மறைந்து நின்று தாக்கினார்? இதற்கான பதில்களையும், சுக்ரீவன் - வாலி கதாபாத்திரங்களின் கதையையும் சுருக்கமாக பார்க்கலாம்.
சுக்ரீவன் அனுமன்
சுக்ரீவன் அனுமன்PT

வாலி மூத்தவன், சுக்ரீவன் இளையவன். வாலி மூத்தவன் என்பதால் கிஷ்கிந்தாவிற்கு அரசனாகிறான். எதிரிகளுடன் போரிட்டு வாலி மிகவும் வலிமையானவன் ஆகிறான். அவனை எதிர்ப்பது எதிரிகளால் இயலாத ஒன்றாகிறது.

வாலி, இந்திரனின் அம்சம். இந்திரன் அவனுக்கு ஒரு வரமும் தருகிறான். வாலியுடன் யார் மோதினாலும், எதிராளியின் பலத்தில் பாதி வாலியைச் சேரும் என்பதுதான் அந்த வரம்.

ஒரு சமயம் வாலி, இராவணனோடு மோதும் போது, இராவணனை தோற்கடித்து அவனை தனது மகனான அங்கதனின் தொட்டிலில் விளையாட்டு பொம்மையாக தொங்கவிட்டதாக புராணத்தில் சொல்லப்படுவதுண்டு.

இதேபோல துந்துபி என்பவனை வாலி கொன்றதால், துந்துபியின் சகோதரன் மாயாவி வாலியுடன் போரிட்டான். இருவருக்குமிடையில் பயங்கரமான சண்டை மூள்கிறது. வாலிக்கு பயந்த மாயாவி ஒரு குகைக்குள் போய் ஒளிந்துக்கொள்கிறான். மாயாவியை துறத்தி சென்ற வாலியும், அக்குகைக்குள் இறங்கி போரிட செல்கிறான்.

வாலிக்கு உதவியாக சுக்ரீவனும் குகைக்குள் இறங்குகையில், சுக்ரீவனை வாலி தடுத்து நிறுத்தி, “தமயனே... நீ என்னுடன் வரவேண்டாம். மாயாவியை நான் வெற்றிபெற்று வருகிறேன். அதுவரை இங்கேயே காத்திரு” என்று கூறி வாலி மாயாவியைத் தேடி குகைக்குள் இறங்கி செல்கிறான்.

சுக்ரீவனும் வாலி வருவான் என்று காத்திருக்கிறான். நாட்கள், மாதங்களாகிறது, மாதங்கள் வருடங்களானது. ஆனால் வாலி வரவில்லை. ஒருசமயத்தில் குகைக்குள் இருந்து அதி பயங்கர சத்தமும் அதைத் தொடர்ந்து குருதியும் வெளியேறியது. இறந்தது வாலி தான் என்று நினைத்த சுக்ரீவன், அந்த மாயாவி தன்னையும் வந்து தாக்கக்கூடும் என்று நினைத்து மாயாவி வெளியே வராமல் இருக்க குகையின் வாயிலை பெரும் பாறையைக்கொண்டு மூடிவிட்டு நாட்டை காக்க கிஷ்கிந்தாவிற்கு திரும்பிவிட்டு, மன்னனாக முடிசூட்டிக் கொள்கிறான்.

ஆனால் குகைக்குள் இறந்தது மாயாவி. மாயாவியை வெற்றிக்கொண்ட வாலி குகைக்குள் இருந்து போராடி திரும்பி நாட்டுக்கு வரவும், அங்கு தன் தமயன் சுக்ரீவன் அரசாட்சி புரிவதை காண்கிறார். இதனால் சுக்ரீவன் மேல் கடும் கோபம் கொள்கிறான் வாலி. “உனக்கு என்ன தைரியம் இருந்தால், நான் வெளியே வரமுடியாதவாறு குகையினை மூடிவிட்டு நான் இல்லாத சமயத்தில் அரசனாக முடி சூடிக்கொள்வாய்? உனக்கந்த தைரியத்தை யார் தந்தது? “ என்று கூறி சுக்ரீவனுடன் போரிட்டான்.

சுக்ரீவனின் மனைவி ருமாவை அபகரித்துக்கொண்ட வாலி சுக்ரீவனை நாட்டைவிட்டு துரத்தி விடுகிறான். சுக்ரீவன் வாலிக்கு பயந்து கொண்டு ரிஷ்ய பர்வத மலையில் மறைந்து வாழ செல்கிறான். சுக்ரீவனுக்கு துணையாக அனுமனும் நாட்டை விட்டு வெளியேறிவிடவே, இருவரும் ரிஷ்ய பர்வத மலையில் தஞ்சமடைகின்றனர். அப்பொழுதுதான் அனுமன் ராமனை சந்தித்து சுக்ரீவனனுக்கு உதவி செய்யுமாறு கேட்கிறார். ராமனும் சுக்ரீவனனுக்கு உதவி செய்வதாக வாக்களிக்கிறார். ராமன் மறைந்து நின்று வாலியை தாக்குகிறார்.

இதில் நேராக நின்று தாக்கினால் ராமரின் பாதி பலம் சுக்ரீவனுக்கு போய்விடும் என்பதைவிட, ராமரைக் கண்டால், வாலி ராமரிடம் சரணாகதி அடைந்துவிடுவான். அதனால் ராமன் சுக்ரீவனுக்கு செய்துக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் போய் விடும் என்று லட்சுமணன் வாலியிடம் கூறியதாக கம்ப ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் வாலிதான் மறுபிறப்பில் கிருஷ்ணனின் காலில் அம்பினை தைக்கும் ஜடா என்ற வேடனாக பிறந்தான் என்று புராணங்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com