வீட்டில் செல்வம் சேரவேண்டுமா... இதை எல்லாம் கடைபிடியுங்கள்..! #Spiritual

வீட்டில் வெள்ளை புறா இருந்தால் பண வரவு நிச்சயம்
குபேரலஷ்மி
குபேரலஷ்மிPT

வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா அப்படி என்றால் இது எல்லாம் கடைபிடியுங்கள்

உங்களுக்காக 10 டிப்ஸ்.

1 செல்வத்துக்கு அதிபதி குபேரன். அப்படிப்பட்ட குபேரனுக்கு ஊறுகாய் என்றால் மிகவும் இஷ்டமாம். ஆகவே வீட்டில் பலவித ஊறுகாய்கள் இருந்தால் குபேர கடாக்ஷம் கிடைக்கும்.

2.மாலைப் பொழுதில் விளக்கு ஏற்றியவுடன் பால் தயிர் உப்பு தண்ணீர் ஊசி நூல் இவை வீட்டிலிருந்து வெளியே செல்லக்கூடாது.

3.பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய பணவரவு அதிகரிக்கும்

4.குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் நெல்லி மரம் வில்வமரம் கிணறு போன்றவை இருந்தால் பண வரவு அதிகரிக்கும்

5.ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்ற இருப்பவர்களின் கையால் பணத்தைப் பெற்றுக் கொண்டால் செல்வம் கொழிக்கும்

6.வெள்ளம் பாசிப்பருப்பு இவை இரண்டையும் பசுவிற்கு தந்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும்.

7.அவரவர்கள் நட்சத்திரத்தில் திருநங்கைகளுக்கு திருப்தியாக உணவளித்து அவர்களின் கையால் பணத்தைப் பெற்றால் செல்வம் கொழிக்கும்

8.அம்மாவாசை நாட்களில் வாசலில் கோலம் இடக்கூடாது. தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்க கூடாது

9.வீட்டில் விளக்கு ஏற்றும் போது அதில் இரண்டு கற்கண்டையை போட்டு ஏற்றினால் லட்சுமி கடாக்ஷம் பெருகும்

10.ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று சத்திய நாராயணா பூஜை செய்துவர வீட்டில் செல்வம் பெருகும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com