51 சக்தி பீடங்கள் எவை எவை என்று தெரியுமா? சக்தி பீடங்கள் ஏற்பட காரணம் என்ன?

தக்‌ஷ பிரஜாபதியின் மகள் தான் தாட்சாயணி. இவள் சிவ பெருமான் மீது ஆசைக்கொண்டு அவரை மணந்தாள். ஆனால், தக்‌ஷணுக்கு தனது மகள் ஒரு சுடலையில் வீற்றிருக்கும் ஈசனை கணவனாக கொண்டதில் துளியும் விருப்பமில்லையாததால், ஈசனை வெறுத்தார்.
சக்தி பீடம்
சக்தி பீடம்web

தக்‌ஷ பிரஜாபதியின் மகள் தான் தாட்சாயணி. இவள் சிவ பெருமான் மீது ஆசைக்கொண்டு அவரை மணந்தாள். ஆனால், தக்‌ஷணுக்கு தனது மகள் ஒரு சுடலையில் வீற்றிருக்கும் ஈசனை கணவனாக கொண்டதில் துளியும் விருப்பமில்லையாததால், ஈசனை வெறுத்தார்.

ஒருமுறை தக்‌ஷன் தான் நடத்திய யாகத்திற்கு ஈசனையும் தனது மகளான தாட்சாயணியையும் அழைக்கவில்லை. ஆனாலும் தனது தந்தையின் மேல் உள்ள அன்பால் அழையா விருந்தாளியாக தன் தந்தை நடத்தும் யாகத்தில் கலந்துக்கொள்ள விரும்பி தாட்சாயிணி தன் தந்தை இல்லத்திற்கு சென்றாள். ஆனால் அங்கு அவமானத்தையே அவள் பெற்றாள். அந்த அவமானத்தை தாங்கிக்கொள்ள இயலாமல், அதே இடத்திலேயே தன் தந்தையின் யாகத்தை நிறுத்தும் பொருட்டு தன் உயிரை ஈந்தாள்.

இதை கேள்விபட்ட ஈசன் மிகவும் துயறுற்று, தனது மனைவியின் பூத உடலை சுமந்தபடி ஈரேழு உலகத்தையும் சுற்றினார். ஈசனின் துயரத்தை நீக்குவதற்காக நாராயணனும் தனது சுதர்சன சக்கரத்தைக் கொண்டு தாட்சாயணிக்கு முக்தி அளிக்க நினைத்து, ஈசனின் கையிலிருந்த ஸ்ரீ தாட்சாயணி தேவியின் அங்கங்களை 51 துண்டுகளாக்கி அவற்றை பூமியில் விழச்செய்தார்.

அப்படி தேவியின் அங்கங்கள் விழுந்த இடங்களாக கருதப்படும் 51 சக்தி பீடங்களின் பெயர்களும் அங்குள்ள தேவியர்களின் திருநாமங்களும் இங்கே!

(51 சக்தி பீடங்கள் குறித்து பலவிதமான மாறுபட்ட கருத்துகள் உண்டு. இங்கே திருவாவடுதுறைஆய்வு மையத்தில் கூறப்பட்டவாறு பதிவுசெய்யப்பட்டுள்ளது)

1) ஸ்ரீ புல்லரா தேவீ

விழுந்த அங்கம்: கீழ் உதடு

விழுந்த இடம்: அட்டஹாஸம்

அஹ்மத்பூர் காட்வா பாதை அருகில் லாப்பூர்

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ விஸ்வேஸ பைரவர்

2) ஸ்ரீ விமலா தேவீ

விழுந்த அங்கம்: தொப்புள்

விழுந்த இடம்: உத்கலபீடம்ஹவுரா வால்டேர் வழியில் குர்தா ரோடு வழியே பூரி

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ ஜகந்நாத பைரவர்

3) ஸ்ரீ மாங்கல்ய சண்டிகா தேவீ

விழுந்த அங்கம்: இடது முழங்கை

விழுந்த இடம்: உஜ்ஜயின் ஹரஸித்தி தேவி ஆலயம் சிப்பரா நதிக்கரை (மத்தியப் பிரதேசம்)

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ கபில பைரவர்

4) ஸ்ரீ கண்டகீசண்டீ தேவீ

விழுந்த அங்கம்: வலது கன்னம்

விழுந்த இடம்: முக்திநாத்

கண்டகீ நதிக்கரை (நேபாளம்)

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ சக்ரபாணி பைரவர்

5) ஸ்ரீ சர்வாணீ தேவீ

விழுந்த அங்கம்: முதுகு

விழுந்த இடம்: கன்னியாகுமரி (தமிழ்நாடு)

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ நிமிஷ பைரவர்

6) ஸ்ரீ அபர்ணா தேவீ

விழுந்த அங்கம்: வலதுகால் பெருவிரல்

விழுந்த இடம்: பவானிபூர் பூதாத்ரீ ஆலயம் (வங்கதேசம்)

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ க்ஷீரகண்ட பைரவர்

7) ஸ்ரீ ஜயதுர்க்கா தேவீ

விழுந்த அங்கம்: காதுகள்

விழுந்த இடம்: கர்ணாட்

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ அபீரு பைரவர்

8) ஸ்ரீ மஹாமாயா தேவீ

விழுந்த அங்கம்:கழுத்தின் மேல்பகுதி

விழுந்த இடம்: அமர்நாத் குகையினுள் பனியினால் ஆன சக்திபீடம் (காஷ்மீர்)

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ த்ரிஸந்த்யேஸ்வர பைரவர்

9) ஸ்ரீ காமா தேவீ

விழுந்த அங்கம்: யோனீ

விழுந்த இடம்: காமாக்யா

பிரம்மபுத்ரா நதிக்கரை

கௌஹாத்தி (அஸ்ஸாம்)

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீஉமாநந்த பைரவர்

10) ஸ்ரீ காளிகா தேவீ

விழுந்த அங்கம்: வலது கால் விரல்கள்

(கட்டை விரலைத் தவிர)

விழுந்த இடம்: கல்கத்தா

காளி கோவில் (மேற்கு வங்காளம்)

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ நகுலீச பைரவர்

11) ஸ்ரீ தேவகர்ப்பா தேவீ

விழுந்த அங்கம்: எலும்புகள்

விழுந்த இடம்: காஞ்சிபுரம்

(காமாட்சி கோவிலுக்கும் குமரக்கோட்டத்திற்கும் இடையே உள்ள மகாகாளி கோவில் ஸ்ரீ ஆதி காமாட்சி)

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ கங்காள பைரவர்

12) ஸ்ரீ காளி தேவீ

விழுந்த அங்கம்: இடுப்பின் வலது பக்கம்

விழுந்த இடம்: பூரி நீலமாதவன் கோவில். ஜகந்நாதர் கோவில் அருகில் ஒரிஸா

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ அஸிதாங்க பைரவர்

13) ஸ்விமலா தேவீ

விழுந்த அங்கம்: கிரீடம்

விழுந்த இடம: ஹவுரா பர்ஹர்வா பாதையில் அஜீம்கஞ்ச் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள பட்நகர் என்ற சிற்றூரில் கங்கை நதிக்கரை தேவி ஆலயம்

காவல் பைரவர் பெயர் ஸ்ரீ ஸம்வர்த்த பைரவர்

14) ஸ்ரீ சாவித்ரி தேவீ

விழுந்த அங்கம்: வலது கணுக்கால்

விழுந்த இடம்: குருக்ஷேத்ரம் ஸ்தாணு சிவ ஆலயம் அருகிலுள்ள பத்ரகாளி கோவில்

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ ஸ்தாணுநாத பைரவர்

15) ஸ்ரீ விஸ்வேஷி தேவீ

விழுந்த அங்கம்: வலது கன்னம்

விழுந்த இடம்: குவ்வூர்

ஆந்திராவில் ராஜமுந்திரி அருகில் கோதாவரிக் கரையில்

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ தண்டபாணி பைரவர்

16) ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவீ

விழுந்த அங்கம்: முக்கண்கள்

விழுந்த இடம்: கோலாப்பூர், மஹாராஷ்ட்ரா

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ க்ரோத பைரவர்

17) ஸ்ரீ பவானீ தேவீ

விழுந்த அங்கம்: வலது கை

விழுந்த இடம்: சட்காவ் பங்களாதேஷில் சீதாகுண்டம் அருகில் சந்திரநாத் மலையிலுள்ள சந்திரசேகர் ஆலயத்தில்

காவல் பைரவர் பெயர்:ஸ்ரீ சந்திரசேகர பைரவர்

18) ஸ்ரீ ஸுநந்தா தேவீ

விழுந்த அங்கம்: மூக்கு

விழுந்த இடம்: சிகார்பூ கிராமம்

பங்களாதேஷில் ஸுநந்தா நதிக் கரையில் உள்ள உக்ரதாரா தேவீ ஆலயத்தில்

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ த்ரியம்பக பைரவர்

19) ஸ்ரீ நாராயணீ தேவீ

விழுந்த அங்கம்: மேல் பல்வரிசை

விழுந்த இடம்:சுசீந்திரம்

தாணுமாலயன் கோவில் தமிழ்நாடு

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ ஸம்ஹார பைரவர்

20) ஸ்ரீ காலிகா தேவீ

விழுந்த அங்கம்: ஹாரம்

விழுந்த இடம்: ஹவுரா. க்யூல் வழியில் நல்ஹாடி ரயில் நிலையத்தில் இருந்து 3 கி‌.மீ தொலைவில் உள்ளது

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ யோகேச பைரவர்

21) ஸ்ரீ சோணா தேவீ

விழுந்த அங்கம்: இடுப்பின் இடது பக்கம்

விழுந்த இடம்: அமர்கண்ட்

நர்மதை உற்பத்தி ஆகும் குண்டம்

மத்தியப் பிரதேசம்

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ சோணபத்ர பைரவர்

22) ஸ்ரீ காலிகா தேவீ

விழுந்த அங்கம்: குடல்

விழுந்த இடம்: நந்திபூர் கிராமம்

அவுரா க்யூல் வழியில் சந்தியா ரயில் நிலையம் அருகில்

காவல்பைரவர் பெயர்: ஸ்ரீ யோகேச பைரவர்

23) மஹாமாயா தேவீ

விழுந்த அங்கம்: முழங்கால்

விழுந்த இடம்: பசுபதிநாத்

பாக்மதீ நதிக்கரையில் உள்ள குஹ்யேஸ்வரீ ஆலயம் நேபாளம்

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ கபால பைரவர்

24) ஸ்ரீ திரிபுரசுந்தரி தேவீ

விழுந்த அங்கம்: வலதுகால்

விழுந்த இடம்: திரிபுரா

ராதாகிருஷ்ணபூர் கிராமத்தில் 2 கி.மீ தொலைவில் உள்ள மலையில் அசாம்

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ திரிபுரேச பைரவர்

25) ஸ்ரீ ப்ராமரீ தேவீ

விழுந்த அங்கம்: இடதுகால்

விழுந்த இடம் : வங்காளம்

ஜல்பாகுரி ஜில்லா சால்வாடீ கிராமத்தில் த்ரிஸ்ரோதா நதிக் கரையில்

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ அம்பர பைரவர்

26) ஸ்ரீவாராஹீ தேவீ

விழுந்த அங்கம்: கீழ் பல்வரிசை

விழுந்த இடம்: பஞ்சஸாகரம்

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ மஹாருத்ர பைரவர்

27) ஸ்ரீ மஹீலா தேவீ

விழுந்த அங்கம்: இடதுகை

விழுந்த இடம்: வங்காளம்

அஹ்மத்பூர் கட்வா வழியில் உள்ள

கேதுப்பிரம்மம் கிராமம்

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ பீருக பைரவர்

28) ஸ்ரீலலிதா தேவீ

விழுந்த அங்கம்: கைவிரல்கள்

விழுந்த இடம்: பிரயாகை அலோப்தேவி ஆலயம்

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ பவ பைரவர்

29) ஸ்ரீ ஸந்த்ரபாஹா தேவீ

விழுந்த அங்கம்: வயிறு

விழுந்த இடம்: சோம்நாத் குஜராத்

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ வக்ரதுண்ட பைரவர்

30) ஸ்ரீ உமா தேவீ

விழுந்த அங்கம்: கேசம்விழுந்த இடம்: மதுரா

மதுரா பிருந்தாவனம் சாலையில் பூதேஸ்வர மஹாதேவர் ஆலயத்தில்

பிருந்தாவனத்தில் இருந்து 3 கி.மீ

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ உக்ர பைரவர்

31) ஸ்ரீ அவநதீ தேவீ

விழுந்த அங்கம்: மேல்உதடு

விழுந்த இடம்: சிப்ரா நதிக்கரை

உஜ்ஜைன் மத்தியப் பிரதேசம்

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ ஸம்பகர்ண பைரவர்

32) ஸ்ரீ காயத்ரீ தேவீ

விழுந்த அங்கம்: மணிக்கட்டு

விழுந்த இடம்: புஷ்கர் ராஜஸ்தான்

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ ஸர்வாநந்த பைரவர்

33) ஸ்ரீ ஸர்வாநந்தகிரீ தேவீ

விழுந்த அங்கம்: வலது கணைக்கால்

விழுந்த இடம்: பாட்னா

மஹராஜ் கஞ்ஜில் உள்ள படீபனேஸ்வரீ ஆலயம்

காவல் பைரவர் பெயர்:

ஸ்வ்யோமகேஸ பைரவர்

34) ஸ்ரீ தாக்ஷாயினீ தேவீ

விழுந்த அங்கம்: வலது முன்கை

விழுந்த இடம்: மானசரோவர் ஏரி

கைலாய மலை திபெத்

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ அமர பைரவர்

35) ஸ்ரீ உமா தேவீ

விழுந்த அங்கம்: இடது தோள்

விழுந்த இடம்: நேபாளம்

நேபாள எல்லையில் உள்ள ஜனக்புரியில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள உச்சைட் ஊரில் உள்ள துர்க்கையின் ஆலயத்தில் இருந்து 14 கி.மீ தொலைவில் உள்ள வனதுர்கா ஆலயம்

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ மஹோதர பைரவர்

36) ஸ்ரீ யஸோரேஸ்வரீ தேவீ

விழுந்த அங்கம்: இடது முன்கை

விழுந்த இடம்: ஜெய்ஷோர் பங்களாதேஷ்

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ சண்ட பைரவர்

37) ஸ்ரீ குமாரீ தேவீ

விழுந்த அங்கம்: வலது தோள்

விழுந்த இடம்: குளித்தலை

அராளகேசி அம்மன் கோவில்

காவல் பைரவர் பெயர்:ஸ்ரீ சிவா பைரவர்

38) ஸ்ரீ ஸிவாநீ தேவீ

விழுந்த அங்கம்: வலது மார்பு

விழுந்த இடம்: சித்ரகூடம்

மைஹர் அருகில் உள்ளது

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ சண்ட பைரவர்

39) ஸ்ரீ இந்த்ராக்ஷீ தேவீ

விழுந்தஅங்கம்: கால் சலங்கை

விழுந்த இடம்: இலங்கை

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ ராக்ஷேஸேஸ்வர பைரவர்

40) ஸ்ரீ மஹிஸாஸூர மர்த்தினீ தேவீ

விழுந்த அங்கம்: நெஞ்சு

விழுந்த இடம்: பாபஹரா

ஒண்டால் சந்தியா வழியில் துப்ராஜ்பூரில் இருந்து 10 கி.மீ வடக்கே வெந்நீர் ஊற்றுகளுக்கு அருகில் உள்ள மயானம்காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ வக்ரநாத பைரவர

41) ஸ்ரீ விசாலாக்ஷி தேவீ

விழுந்த அங்கம்: குண்டலங்கள்

விழுந்த இடம்: காசி

மணிகர்ணிகா கட்டத்தில் அருகில் உள்ள ஆலயத்தில்

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ கால பைரவர்

42) ஸ்ரீ கபாலினீ தேவீ

விழுந்த அங்கம்: இடது கணுக்கால்

விழுந்த இடம்: வங்காளம்

மிட்னாபூர்மாவட்டம் பஞ்சகுரா ரயில் நிலையத்தின் அருகே விபாச நதிக்கரையில்

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ பீம பைரவர்

43) ஸ்ரீ அம்பிகா தேவீ

விழுந்த அங்கம்: இடதுகால் விரல்கள்

விழுந்த இடம்: வைராட்

ஜெய்ப்பூர் அருகில் உள்ள கிராமம்

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ அம்ருதாக்ஷ பைரவர்

44) ஸ்ரீ ஜயதுர்க்கா தேவீ

விழுந்த அங்கம்: இதயம்

விழுந்த இடம்: வைத்யநாதர் ஆலயம்

ஹவுரா பாட்னா வழியில் ஜஸடீஹ் வழியில் உள்ளது

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ வைத்யநாத பைரவர்

45) ஸ்ரீ ஜெயந்தீ தேவீ

விழுந்த அங்கம்: இடது கணைக்கால

விழுந்த இடம்: பாஉர்பாக் கிராமம்

அஸ்ஸாமில் உள்ள ஷில்லாங்கில் இருந்து 52 கி.மீ தொலைவில்உள்ள ஜயந்தியா மலையில் உள்ளது

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ க்ரமதீஸ்வர பைரவர்

46) ஸ்ரீ அகிலாண்டேஸ்வரீ தேவீ

விழுந்த அங்கம்: முகவாய்க்கட்டை

விழுந்த இடம்: திருவானைக்காவல்

தமிழ்நாடு

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ விக்ருதாக்ஷ பைரவர்

47) ஸ்ரீ த்ரிபுரமாலினீ தேவீ

விழுந்த அங்கம்: இடது மார்பு

விழுந்த இடம்: ஜலந்தர் பஞ்சாப்

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ பீஷண பைரவர்

48) ஸ்ரீ ஸித்திதா தேவீ

(ஜ்வாலை வடிவானவள்)

விழுந்த அங்கம்: நாக்கு

விழுந்த இடம்: ஜ்வாலாமுகீ பஞ்சாப்

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ உந்மத்த பைரவர்

49) ஸ்ரீ பிரம்மராம்பா தேவீ

விழுந்த அங்கம்: கழுத்தின் கீழ்பகுதி

விழுந்த இடம்: மல்லிகார்ஜூனம்

ஸ்ரீசைலம் ஆந்திரப் பிரதேசம்

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ ஸம்பராநந்த பைரவர்

50) ஸ்ரீ ஸுந்தரீ தேவீ

விழுந்த அங்கம்: வலது புட்டச்சதை

விழுந்த இடம்: ஸ்ரீபர்வதம்

காஷ்மீர் லடாக் இடையில் உள்ளது

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ ஸுந்தராநந்த பைரவர்

51) ஸ்ரீ கோடரீ தேவீ

ஜ்வாலை வடிவானவள் மல்லிகார்ஜூனம்

ஸ்ரீசைலம் ஆந்திரப் பிரதேசம்

காவல் பைரவர் பெயர்: ஸ்ரீ ஸம்பராநந்த பைரவர்

ஜ்வாலை வடிவானவள்

இத்தளங்களெக்கால்ம் செல்ல முடியாவிட்டாலும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே தியானிப்போம். சக்தி பெறுவோம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com