மார்கழி மாதத்தை ஒட்டி திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் விளக்கத்துடன்...
திருப்பாவை, திருவெம்பாவை புதியதலைமுறை

மார்கழி மாதம் 20 வது நாள்: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களின் மகிமை

மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன.
Published on

மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன.

திருப்பாவை திருவெம்பாவையின் பிற பாடல்களையும் விளக்கத்தையும் இங்கே வாசிக்கலாம்...!

அதன்படி மார்கழி 20 ம் நாளான இன்று...

திருப்பாவை

கண்ணனின் முந்தைய அவதாரங்களை சொல்லி அவனின் பெருமையைச்சொல்லி தூங்குவது போல் பாசாங்கு செய்யும் கண்ணனை கோபியர்கள் புடை சூழ ஆண்டாள் எழுப்புகிறார்.

எப்படி தெரியுமா?... பக்தர்கள் நாராயணா.. என்று கூப்பிட்ட அடுத்த நொடி தேவர்களை காட்டிலும் முன்னதாக சென்று தனது பக்தர்களை காத்து அருள் தந்த கஜேந்திர மோட்சத்தையும், பிரகலாதனை காத்த நரசிம்ம அவதாரத்தையும் மனதில் கொண்டு ஆண்டாள் பாசுரம் இயற்றி இருக்கிறார்.

திருப்பாவை ஆண்டாள்
திருப்பாவை ஆண்டாள்

பாடல்

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!

செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!

செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்

நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்

உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.

பொருள்:

“முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று... முப்பத்து மூன்றுகோடி தேவர்களுக்கு எல்லாம் முன்னதாகச் சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!... பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக கடவுளே! எழுவாயாக!

நேர்மையானவனே! ஆற்றல்மிக்கவனே! பகைவர்களுக்கு பயத்தைக் கொடுக்கும் தூயவனே! எழுவாயாக.

செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!... பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமி தாயே! எழுவாயாக. எங்களுக்கு உன் கணாவராகிய கண்ணனை காண தந்து எங்களை அருள் மழையில் நனையச் செய்வாயாக”

என்கிறார்.

திருவெம்பாவை

அடுத்ததாக சிவபெருமானின் பெருமையக்கூறும் திருவெம்பாவையின் கடைசியான 20ம் பாசுரம். நாளை திருப்பள்ளி எழுச்சி..

திருவண்ணமலையில் வீற்றிருக்கும் அண்ணாமலையாரையும் உண்ணாமுலையாளையும் எப்படி தரிசிப்பது என்பதை மாணிக்கவாசகர் தனது பதிகத்தில் எழுதியுள்ளார். அதில் கடைசி பாடலான 20வது பதிகத்தை இன்று பார்க்கலாம்.

பாடல்:

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்

போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.

பொருள்:

ஆதியும் அந்தமும் இல்லாதவனே... முதலும் நீயே... முடிவும் நீயே. அந்தமும் நீயே...அனைத்தும் நீயே என்பதை குறிப்பதாக இருக்கிறது இந்த பாசுரம்.

அப்பனே.. எல்லாவற்றுக்கும் முதலாவதான உன் பாதமலர்களை வணங்குகிறோம்.

எல்லாவற்றுக்கும் முடிவாயுள்ள உன் மென்மையான திருவடிகளை பணிகின்றோம்.

எல்லா உயிர்களையும் படைக்கின்ற உன் பொற் பாதங்களை சரணடைகின்றோம்.

எல்லா உயிர்களுக்கும் வாழும் காலத்தில் இன்பமான வாழ்வு தரும் மலரடிகளை பிரார்த்திக்கிறோம்.

உயிர்களை அழித்து இறுதிக்காலத்தை தருகின்ற இணையற்ற காலடிகளைப் போற்றுகின்றோம்.

திருமாலாலும், பிரம்மாவாலும் காண முடியாத தாமரை பாதங்களைக் காண்பதில் பெருமிதமடைகின்றோம்.

எங்களுக்கு பிறப்பற்ற நிலை தரும் பொன் போன்ற திருவடிகளை பற்றுகின்றோம்.

இவ்வாறு உன்னோடு ஐக்கியமாகி, உன் நினைவுகளுடன் நீர்நிலைகளில் நீராடி மகிழ்கிறோம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com