இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த ஆன்மிக தத்துவ ஞானி!ஆதிசங்கரர் அவதரித்த தினம் இன்று..

செளந்தர்ய லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜகோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேக சூடாமணி, ஆத்மபோதம், கனகதாரா ஸ்தோத்திரம், சுப்பிரமணிய புஜங்கம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
ஆதிசங்கரர்
ஆதிசங்கரர்PT

ஆதிசங்கரர் அவதரித்த தினம் இன்று. இந்து மத வேதாந்தத்தைப் பரப்புவதற்காக இந்தியாவின் நான்கு மூலைகளிலும் நான்கு மடங்களை (கோவர்தன மடம், சிருங்கேரி சாரதா மடம், துவாரகை காளிகா மடம், மற்றும் ஜோஷி மடம்) நிறுவியவர். அப்படிபட்ட இந்துகளின் குருவாகபோற்றப்படும் ஆதி சங்கர் யார் அவரின் வாழ்கை வரலாறு என்ன? என்பதை பார்க்கலாம்.

வாழ்க்கை வரலாறு.

ஏழாம் நூற்றாண்டில் கேரளத்தில் உள்ள காலடி எனப்படும் ஊரில் ஆரியாம்பாள் சிவகுரு தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு நீண்ட காலமாய் பிள்ளை பேறு இல்லாததால், கேரளாவில் உள்ள வடக்கு நாதரை வணங்கி வந்தனர்.

ஒரு நாள் சிவகுருவின் கனவில் தோன்றிய சிவன், “குறைந்த ஆயுளை உடைய எல்லா நற்குணங்களும் ஞானம் கொண்ட புத்திசாலி குழந்தை வேண்டுமா? அல்லது நீண்ட ஆயுளை உடைய சாதாரண குழந்தை வேண்டுமா? என்று கேட்டார்.

அதற்கு சிவகுரு புத்திசாலி குழந்தை தான் வேண்டும் என்றார். சிவபெருமானும் சிவகுருவின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, தானே ஒரு குழந்தையாக ஆரியாம்பாள் வயிற்றில் பிறந்தார். வைசாக மாதம் வளர்பிறை திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த அந்த ஆண்குழந்தைக்கு சங்கரர் என்று பெயரிட்டு வளர்த்தனர். சங்கரரின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர்கள் இவன் ஒரு பெரிய ஞானியாக வரக்கூடிய யோக ஜாதகம் பெற்றவன். என்றார்கள்.

அதே போல் சங்கரரும் சிறு வயதிலேயே பல நூல்களைக்கற்று தேர்ந்தார். இவருக்கு மூன்று வயது ஆகும்போதே தந்தை சிவகுரு காலமானார். மிகவும் துக்கம் அடைந்த தாய் ஆரியாம்பாள் உறவினர்களின் உதவியுடன் அவருக்கு உபநயணத்தை நடத்தி தகுந்த குருவிடம் வேதம் சாஸ்திரம் முதலியவைகளை பயில குருகுலம் அனுப்பினார்.

சங்கரரும் ஈசனின் அவதாரமானதால் குருவால் போதிக்கப்பட்டதை விரைவிலேயே தெரிந்துக் கொண்டார்.

அத்துடன் அறிய வேண்டிய சகல முக்கிய சாஸ்திரங்களையும் இரண்டு வருடங்களுக்குள்ளாகவே கற்றுத் தேர்ந்தார்.

இளமைப் பிரயாணத்தில் கவுடா பாதரின் சீடரான கோவிந்த பாகவதரிடம் பகவத் பாதரிடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் கற்று தேர்ந்தார். இந்து சமயத்தில் மூன்று அடிப்படை நூல்கள், பத்து உபனிடங்கள் பிரம்ம சூத்திரம் ஆகியவற்றை கற்று தேர்ந்தார். பகவத் கீதைக்கு விளக்க உரை அளித்து, மற்றும் அத்வைத வேதாந்தம் தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர்.

விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களும் இவர் விளக்கவுரை நிறுவியுள்ளதாக பொது கருத்து உள்ளது

செளந்தர்ய லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜகோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேக சூடாமணி, ஆத்மபோதம், கனகதாரா ஸ்தோத்திரம், சுப்பிரமணிய புஜங்கம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்..

ஒரு சமயம் இவர் குருவிற்காக உணவு பெற்று வர எண்ணி யாசம் செய்ய தீர்மானித்து ஒரு பெண்மணியின் வீட்டு வாசலுக்கு சென்று “பவதிபிக்‌ஷாந்தஹீ” என்று கேட்கவும், அப்பெண்மணியானவள் மிகவும் ஏழை. ஆனால் தன் வீட்டு வாசலில் ஒரு குழந்தை சன்யாசி பிக்சைகேட்டு நின்றவுடன், அக்குழந்தையை வெறும் கையுடன் அனுப்ப மனமில்லாதவளாய், அக்குழந்தைக்கு ஏதாவது தர நினைத்தாள். ஆனால் அவளிடம் தருமம் செய்ய ஏதும் இல்லை. என்னசெய்வது? என்று யோசித்த அவளின் கையில் ஒரே ஒரு நெல்லிகணி கிடைத்தது. அதை எடுத்து ஆசையோடு சங்கரருக்கு பிட்ச்சை இட்டாள்.

இவளின் ஏழ்மை நிலமை சங்கரருக்கு வருத்தத்தை அளித்தது. அவளின் வறுமையை போக்க நினைத்த சங்கரர், மகாலெஷ்மியை மனதில் நினைத்து கனகதாரா ஸ்தோத்திரத்தை சொன்னார். அடுத்த நிமிடம் அவளின் ஏழ்மையை விரட்டும் பொருட்டு மகாலெஷ்மி சங்கரரின் விருப்பத்திற்கிணங்க சொர்ணமழை பொழிந்தாள .

இவ்வாறு தனது ஏழு வயதிற்குள்ளாக அனைத்து வேதங்கள் சாஸ்திரங்களை கற்று முடித்ததும், அன்னைக்கு துணையாக அருகில் இருக்க நினைத்ட்து காலடி வந்தார். தனது தாய்க்காக நீண்ட தொலைவில் இருக்கும் பூரணா நதியை வீட்டின் அருகில் ஓடச்செய்தார்.

மேலும் என்ன நடந்தது? இவர் எப்படி துறவரம் மேற்கொண்டார். என்பதைப்பற்றிய இவரின் வாழ்கை வரலாற்றை நாளை பார்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com