\
Dhanveer Dayananda Yogi's The Art of Yoga book launch
Dhanveer Dayananda Yogi The Art of Yoga

'The Art of Yoga' இசை புத்தக வெளியீடு! | Dhanveer Dayananda Yogi

நிகழ்ச்சியில் நடிகர் ரிஷி ரித்விக், புலவரும் பட்டிமன்றப் பேச்சாளருமான் ராமலிங்கம் மற்றும் பேச்சாளர் மதுரை ராமகிஷ்ணன் பல பிரபலங்கள் பங்கேற்றார்கள்.
Published on

‘The Art of Yoga: 3335 Yogasana and Sadhana' என்ற இசை ஆல்பத்தின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் ரிஷி ரித்விக், புலவரும் பட்டிமன்றப் பேச்சாளருமான ராமலிங்கம் மற்றும் பேச்சாளர் மதுரை ராமகிஷ்ணன் எனப் பல பிரபலங்கள் பங்கேற்றார்கள். அரசுத்துறை அதிகாரிகள், நிறுவனத்தின் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள், சர்வதேச யோகா ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

புத்தகத்தின் நெகிழ்ச்சியும், இசையின் ஆற்றலையும் உலகத்திற்கு கொண்டுசெல்லும் உடல், மனம் மற்றும் ஆன்மாவை நல்வழிப்படுத்தும் புத்தகமாக `The Art of Yoga: 3335 Yogasana and Sadhana' உருவாகி இருக்கிறதாம். இது, ஆன்மிக குரு சுவாமி தன்வீர் தயானந்த யோகி ஜியால் எழுதப்பட்டுள்ளது. பழங்கால ஆன்மிக ரகசியங்களையும், நடைமுறைப் பயிற்சிகளையும் இணைத்து, இதுவரை இல்லாத அளவில் 3,335 யோகாசனங்கள் மற்றும் சாதனா வழிமுறைகளை இந்த ஒரேநூலில் தன்வீர் ஆவணப்படுத்தியுள்ளார் எனச் சொல்லப்படுகிறது. யோகா கற்கத் தொடங்கும் புதியவர்கள் முதல் ஆன்மிகத் தேடலில் இருக்கும் சாதகர்கள்வரை அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்கும் என்றும் நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் பேசினர்.

Dhanveer Dayananda Yogi's The Art of Yoga book launch
'தர்மன்' படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறேன்! - சிம்ரன் | Simran | Dharman | Rajinikanth
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com