அரச கோலத்தில் காட்சியளிக்கும் ஐயப்பன் - சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

சபரிமலையில் மகரஜோதிக்குப் பின்னும் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 20 ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும் நிலையில், 18ம் தேதி வரை மட்டுமே அரச கோலத்தில் இருக்கும் ஐயப்பனை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.
Sabarimalai
Sabarimalaipt desk

செய்தியாளர் - ரமேஷ் கண்ணன்

சபரிமலையில் பிரதானமான மண்டல பூஜை, மகர சங்கரம பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக் காலத்தின் இரண்டு மாதங்களில் சுமார் 50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

Sabarimalai
Sabarimalaipt desk

வரும் ஜனவரி 20 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், 21 ஆம் தேதி பந்தள மகாராஜா குடும்பத்தினரின் தரிசனத்திற்குப் பின் சபரிமலை நடை அடைக்கப்பட்டு, கோயில் சாவி மகாராஜா குடும்ப உறுப்பினரிடம் ஒப்படைக்கப்படும்.

Sabarimalai
சபரிமலையில் மேளதாளம் முழங்க படிபூஜை... நிறைவடைந்த மகரஜோதி தரிசனம்!

மகர ஜோதியன்று, பந்தள மகாராஜா வழங்கிய திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு, அரச கோலத்தில் ஜொலிக்கும் ஐயப்பன், அதே அரச கோலத்தில ஜனவரி 18 ஆம் தேதி வரை மட்டுமே பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதையடுத்து ஜனவரி 18 ஆம் தேதியான நாளையும் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com