ஆக.29, 2025 | இந்த ராசிக்கு இன்று வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்... இன்றைய ராசிபலன்கள்!
12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் (ஆகஸ்ட் 29ஆம் தேதி) என்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளல்லாம்..
மேஷம்
தொழில் சார்ந்த பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இறை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். எழுத்துத் துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். வருமான வாய்ப்புகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். மனைப் பணிகளில் பொறுமை வேண்டும். உயர் அதிகாரிகளைப் பற்றிய புரிதல் உண்டாகும். புகழ் மேம்படும் நாள்.
ரிஷபம்
உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். குழந்தைகள் இடத்தில் பொறுமை வேண்டும். மனதளவில் ஒருவிதமான பதற்றங்கள் ஏற்பட்டு நீங்கும். விலகிச் சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
மிதுனம்
மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் சில ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தோற்றப் பொலிவுகளில் மாற்றம் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மறைமுக ஒத்துழைப்பு மேம்படும். ஆதரவு கிடைக்கும் நாள்.
கடகம்
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மறைமுகத் தடைகளை வெற்றிகொள்வீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் கைகூடும். தடைப்பட்ட சில விஷயங்கள் நிறைவு பெறும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். வரவு நிறைந்த நாள்.
சிம்மம்
வித்தியாசமான உணவுகளைத் தவிர்க்கவும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில விஷயங்களைப் புரிந்துகொள்வீர்கள். நாவல் விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சுபம் கிடைக்கும் நாள்.
கன்னி
அனுபவம் வாய்ந்த செயல்களால் வாழ்க்கை சிறப்படையும். பணிபுரியும் இடத்தில் ஆதரவான சூழ்நிலைகள் அமையும். விலகி நின்றவர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் நிலவும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உயர்ரக வாகனங்களின் மீது ஈர்ப்பு உண்டாகும். எதிர்ப்பு மறையும் நாள்.
துலாம் ராசி
சோர்வுகள் நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். நண்பர்களின் இடத்தில் பொறுமை வேண்டும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வெளிவட்டத்தில் அனுபவம் கிடைக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.
விருச்சிகம்
மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் வரவுகள் தேவைக்கு இருக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்குகளில் சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
தனுசு
வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தவறிய சில வாய்ப்புகளின் மூலம் குழப்பங்கள் ஏற்படும். அவ்வப்போது சில விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்ட காரியத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். தர்ம காரியத்தில் ஒருவிதமான ஈடுபாடு உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.
மகரம்
உடன்பிறந்தவர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். அருள்தரும் வேள்விகளில் கலந்துகொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அமைதி வேண்டிய நாள்.
கும்பம்
உடன்பிறந்தவரிடம் அனுசரித்துச் செல்லவும். சுபகாரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும். உயர்கல்வியில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். பொருளாதாரத்தில் மாற்றம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் மேலோங்கும். பயணம் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். பயிர்த் தொழிலில் சிந்தித்துச் செயல்படவும். நலம் நிறைந்த நாள்.
மீனம்
பிறமொழி மக்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். தொலைதூரக் கல்வியில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். அரசு வகையில் உதவிகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.
1. தேதி: மங்களகரமான விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 13 ந் தேதி வெள்ளிக் கிழமை
2. திதி : இரவு 7:39 மணி வரை ஷஷ்டி திதி பிறகு சப்தமி திதி
3. நட்சத்திரம் : காலை 10:59 மணி வரை ஸ்வாதி நட்சத்திரம் பிறகு விசாகம் நட்சத்திரம்
4. ராகு காலம் : காலை 10:30மணி முதல் 12 மணி வரை.
5. எமகண்டம் : மதியம் 3மணி முதல் 4:30 மணி வரை.
6. குளிகை : காலை 7:30 மணி முதல் 9 மணி வரை
7. நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10:30 மணி வரை
8. சூலம்: மேற்கு
9. யோகம் : காலை 6:03மணி முதல் சித்த யோகம்
10. சந்திராஷ்டமம் : காலை 10:59 மணி வரை. உத்திரட்டாதி நட்சத்திரம் பிறகு ரேவதி நட்சத்திரம்