கள்ளழகரின் அருளால் நீங்கிய சாபம்.. தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலின் தல புராணம்!

இந்து அறைநிலை துறை சார்பில் கோவிலானது புணரமைக்கப்பட்டு , யாகசாலைகள் அமைக்கப்பட்டு பல மந்திரங்கள் ஹோமங்கள் செய்யப்பட்டு, புனிதநீரைக்கொண்டு ஆச்சாரியர்கள் கலசதிற்கு அபிஷேகம் செய்தனர்.
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில்
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில்PT

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பில் உள்ள 300 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. முன்னதாக இந்து அறைநிலை துறை சார்பில் கோவிலானது புணரமைக்கப்பட்டு , யாகசாலைகள் அமைக்கப்பட்டு பல மந்திரங்கள் ஹோமங்கள் செய்யப்பட்டு, நேற்று முன் தினம் காலை புனிதநீரைக்கொண்டு ஆச்சாரியர்கள் கலசதிற்கு அபிஷேகம் செய்தனர். இந்நிகழ்வை பல்லாயிரக்கணாக்கான மக்கள் கண்டு களித்து சௌந்தரராஜ பெருமாளின் அருளைப்பெற்றனர்.

இதன் வரலாறு என்ன என்பதை பார்க்கலாம்.

“மண்டூகம்” என்ற முனிவர் அவர் பெற்ற சாபத்தினால் தவளையாக மாறிவிட்டார். சாபத்திலிருந்து விடுபட இவர் இத்தலம் இருக்கும் இடத்தில் விஷ்ணுவை வேண்டி தவம் இருந்தார். அப்போது ஒரு அசுரன் அவரை மிகவும் தொந்தரவு செய்து வந்துள்ளான். அசுரனிடமிருந்து தப்பிக்க மதுரையில் இருக்கும் கள்ளழகரை வேண்டினார். மனமிறங்கிய கள்ளழகர் அசுரனை அழித்து மண்டூக முனிவருக்காக தாடிகொம்பில் சவுந்தரராஜப்பெருமாளாக நிலைப்பெற்றதாக புராணங்கள் கூறுகிறது.

இக்கோவிலை 500 வருடங்களுக்கு முன்பு விஜயநகர ஆட்சியில் வந்த அட்சுத தேவராயர், ராமதேவராயர் காலத்தில் கட்டியதாக வரலாறு கூறுகிறது. மதுரை சுசீந்திரம் போல இசைத்தூண்கள் மற்றும் சிற்பவேலைப்பாடுகள் நிறைந்துள்ளது.

இங்கு சவுந்தரராஜ பெருமாளும் ஸ்ரீதேவி, பூதேவி தாயாரும் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றனர். கள்ளழகரின் வேண்டுதலை இங்கு நிறைவேற்றிக்கொள்ளலாம். சித்ராபவுர்ணமியன்று கள்ளழகர் போலவே சவுந்தரராஜப்பெருமானும் குடகனாற்றில் இறங்குகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com