திருப்பதி|ஏழுமலையானுக்கு ரூ.140 கோடி மதிப்பில் 121 கிலோ தங்கம் காணிக்கை.. யார் அந்த பக்தர்?
திருப்பதி ஏழுமலையானுக்கு 140 கோடி ரூபாய் மதிப்புள்ள 121 கிலோ எடையுள்ள தங்கத்தை காணிக்கையாக அளிக்க தொழிலதிபர் ஒருவர் முன்வந்துள்ளார். இத்தகவலை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
திருப்பதி கோயிலுக்கு தினமுமே லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து ஏழுமலையானை வரிசையில் நின்று தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.. அதற்கு காரணம் திருப்பதி சென்று வந்தால் திருப்பம் உண்டாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அப்படிதான் திருப்பதிக்கு வந்த பக்தர் ஒருவருக்கு தனது வேண்டுதல் நிறைவேறி வாழ்க்கையில் நல்ல திருப்பம் உண்டாகி உள்ளது. இதனால் தனது நிறுவனத்தின் 60% பங்குகளை விற்று கிடைத்த 7 ஆயிரம் கோடி ரூபாயில் ஒரு தொகையை தங்கமாக திருப்பதி ஏழுமலையானுக்கு தரவுள்ளதாக ஆந்திர முதல்வர் தெரிவித்தார்.
ஆனால் அந்த தொழிலதிபர் யார் என முதல்வர் தெரிவிக்கவில்லை. ஏழுமலையானுக்கு அணிவிக்கும் தங்க ஆபரணங்களின் எடை 120 கிலோ என்றும் அந்த தொழிலதிபர் அதை விட ஒரு கிலோ அதிகமாக தர உள்ளதாகவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
அந்த பக்தருக்கு தனது பெயரை வெளியில் சொல்ல விருப்பம் இல்லாததால் அவருடைய பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். அத்துடன் திருப்பதி கோயிலில் ஏழுமலையானுக்கு தினமும் 120 கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்கள் அலங்கரிக்கப்படுகின்றன. இதனை அறிந்த அந்த பக்தர் அதைவிட கூடுதலாக 121 கிலோ தங்கத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக கொடுக்க இருக்கிறார். அந்த பக்தர் கணிக்கையாக வழங்க இருக்கும் தங்கத்தின் மதிப்பு சுமார் 140 கோடி ரூபாய் என்று ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு கூறி இருக்கிறார்.