இசை நிகழ்ச்சியில் ஒன்றில், அப்போது சிறுவனாக இருந்த எஸ்.பி.பி பாடிய பாடலுக்காகச் சண்டையிட்டு, அவருக்கு முதல் பரிசை வாங்கிக் கொடுத்தவர் எஸ்.ஜானகி. அவரது நினைவலைகள் தற்போது வைரலாகி வருகின்றன.
எஸ்.பி.பி.யுடன் இணைந்து பல பாடல்களை பாடியுள்ள அவர், எஸ்.பி.பி பாடியதில் தனக்கு பிடித்தது இந்த பாடல்தான் என்று மேடையிலேயே ஒருமுறை அவருக்கு முன்பாகக் கூறியதுடன், அதைப் பாடியும் அசத்தியிருந்தார்.
அவருடைய அசாத்திய திறமையால், ஒரு இசையமைப்பாளரின் கம்போசிஷனை மிக வேகமாகப் புரிந்துகொள்வார். மேலும், அந்தப் பாடலில் என்ன மாதிரியான உணர்வுகள் வெளிப்பட வேண்டுமோ, அதற்கேற்ப அதிகக் கவனத்துடன் பாடுவார்.