'நான் ஓடி ஒளியவில்லை' - இன்ஸ்டாகிராமில் இருப்பிடத்தை பதிவிட்ட உக்ரைன் அதிபர்

'நான் ஓடி ஒளியவில்லை' - இன்ஸ்டாகிராமில் இருப்பிடத்தை பதிவிட்ட உக்ரைன் அதிபர்
'நான் ஓடி ஒளியவில்லை' - இன்ஸ்டாகிராமில் இருப்பிடத்தை பதிவிட்ட உக்ரைன் அதிபர்

'நான் ஒளிந்துகொள்ளவில்லை, யாருக்கும் பயப்படவில்லை' என்று தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, இன்ஸ்டாகிராமில்  தனது இருப்பிடத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி திங்களன்று கீவில் உள்ள தனது இருப்பிடத்தை இன்ஸ்டாகிராம் லொகேஷன் மூலமாக தெரிவித்தார். மேலும்,"நான் ஒளிந்துகொள்ளவில்லை. யாருக்கும் பயப்படவும் இல்லை" என்று கீவ் நகரின் பாங்கோவா தெருவில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து ஒரு வீடியோவையும் செலன்ஸ்கி வெளியிட்டார்.அந்த வீடியோ செய்தியில், "திங்கட்கிழமை கடினமான நாள் என்று நாங்கள் கூறுவது உங்களுக்குத் தெரியும். நாட்டில் போர் நடைபெறுகிறது, எனவே ஒவ்வொரு நாளும் திங்கட்கிழமைதான் " என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com