ரஷ்யா - உக்ரைன்
போருக்கு மத்தியில் பிறந்த பிஞ்சு! - தஞ்சமடைந்த சுரங்கத்தில் பூத்த பூ
போருக்கு மத்தியில் பிறந்த பிஞ்சு! - தஞ்சமடைந்த சுரங்கத்தில் பூத்த பூ
உக்ரைன் நாட்டில் போர் தொடரும் நிலையில், மெட்ரோ ரயில்நிலையத்தில் தஞ்சமடைந்திருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
உக்ரைன் தலைநகர் கீவ்-ல் தாக்குதலுக்கு அஞ்சி, பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக மெட்ரோ ரயில்நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது, 23 வயதுபெண் ஒருவருக்கு அங்கேயே குழந்தை பிறந்தது தெரியவந்தது. உடனடியாக பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்த காவல்துறையினர், அவரையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கலவர பூமியில் ஒரு குழந்தையின் ஜனனம் கல்நெஞ்சையும் கரையவைத்தது.

