ரஷ்யா - உக்ரைன்
முடிவுக்கு வருமா போர்? - பேச்சுவார்த்தைக்காக பெலாரஸ் சென்றது உக்ரைன் குழு
முடிவுக்கு வருமா போர்? - பேச்சுவார்த்தைக்காக பெலாரஸ் சென்றது உக்ரைன் குழு
ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை தொடங்க உக்ரைன் குழுவினர் பெலாரஸ் சென்றடைந்தனர்.
ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்து வரும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி ரஷ்யா அழைப்பு விடுத்திருந்தது. முதலில் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்தினால், அதில் பங்கேற்க முடியாது என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். மேலும், அதற்கு மாற்றாக வேறு இடங்களையும் அவர் கூறியிருந்தார்.
இறுதியில், பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த அவர் ஒப்புக் கொண்டதை அடுத்து, அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்படி ரஷ்ய குழுவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் குழுவினர் பெலாரஸ் சென்றடைந்துள்ளனர். இதன் மூலம் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.